பெங்களூர் செல்பவர்களின் வழியல்ல 'வலி'.. தொப்பூர் கணவாயில் கார் பேனட்டை திறந்து காத்து வாங்கிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் ஞாயிறு இரவு ஒரே நேரத்தில் பல ஆயிரம் வாகன ஓட்டிகள் பெங்களூரு நோக்கி சென்றால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை முடிந்த பெங்களூர் திரும்பிய மக்களால் நெரிசல் ஏற்பட்டது. சுமார் 10 கிமீ நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுபற்றி வீடியோ வெளியிட்ட நெட்டிசன், வண்டியை என்ஜின் சூடாகி, ஓட்டவே முடியாத நிலை ஏற்பட்டதால் பலர் பேனட்டை திறந்து வைத்து சாலையில் காத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார்.

சேலம்-தர்மபுரி இடையே உள்ள தொப்பூர் கணவாயில் பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதி சட்டென கீழ்நோக்கி செங்குத்தான சரிவதால், விபத்து அதிகம் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் அப்படித்தான் தொப்பூர் கணவாயில் 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Bengaluru traffic Motorists at Thoppur Pass had to open their car bonnets to let the engines cool down

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் உமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் உதய் (25) உடன் வந்தார்.

இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மக்காச்சோளம் லோடு லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார், 2 சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் இரு லாரிகள் உட்பட 6 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் மக்காச்சோளம் லாரியில் வந்த கிளீனர் உதய் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் கொழுஞ்சிநாதன் (55) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் 2 டிரைவர்களும் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தொடர் விபத்தால் பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தாமல் சாலையிலே கிடந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

மறுப்புறம் ஒரே நேரத்தில் பெங்களூரு நோக்கி மக்கள் தொப்பூர் கணவாயை கடக்க முயன்றதால், பல மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முடங்கியது. இதுபற்றி நெட்டிசன் ஒருவர் வெளியிட்டவீடியோவில் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கி, ஊர்ந்தபடி செல்வதை காண முடிந்தது. அவர் கூறுகையில், எனக்குன்னே வருவீங்களா மாப்பிள்ளை... மாப்பு வச்சுட்டான்யா பெரிய ஆப்பு.. இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

என்ஜினில் சூடு அதிகமாகி, காரையே நிறுத்துவிட்டுகாத்து வாங்க தொடங்கிவிட்டார்கள். கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டருக்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டிருந்தது. பிரேக் அடிச்சு, பிரேக் அடிச்சு கால் எல்லாம் அர்ணால்ட் மாதிரி வீங்கி போய் கிடக்கிறது. சனி, ஞாயிறு ஊருக்கு போனவங்க, இன்னொரு இரண்டு நாள் சேர்த்து இருந்துட்டு வந்தாதான் என்ன... இன்னைக்கு ஓட்டுன ஓட்டுக்கு நாளைக்கு கண்டிப்பாக லீவு தான் போட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட வீடியோவில், நான் ஆக்டிங் டிரைவர் டூட்டிக்கு வந்திருந்தேன். ஓமலூரில் பாலம் வேலை செய்கிறார்கள் என்பதால் சுற்றி செல்ல முடியாது என்று நினைத்து தொப்பூர் வழியாக வந்தேன். தொப்பூரில் கிட்டத்தட்ட 2.3 , 4 மணி நேரமாக நிற்கிறேன்.. கிட்டத்தட்ட நான் நிற்கும் இடத்தில் இருந்து ஏழு , எட்டு கிலோ மீட்டர் நெரிசலாக உள்ளது.

கணவாய்க்கு கீழேயும், மேலேயும் டிராபிக்.. ரொம்ப நேரமாக நிற்கிறேன். தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டிருக்கிறேன். இப்போது மணி இரவு 12.30 ஆகிறது. சேலத்தில் இருந்து 10 மணிக்கு கிளம்பினேன். இப்போது 12.30 மணிக்கு மேல் தொப்பூரிலேயே நிற்கிறேன். தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டேன்" இவ்வாறு புலம்பியபடி வீடியோ போட்டிருக்கிறார்.

பெங்களூருக்கு தொப்பூர் கணவாய் என்றால்,சென்னைக்கு உளுந்தூர்பேட்டை முதல் செங்கல்பட்டு இடையே உள்ள பாதை.. இரண்டு பக்கமே பல இடங்களில் பால வேலை நடப்பதால் வார இறுதியில் நொந்துபோய்விடுவார்கள். சென்னைமாநகர நெரிசலைவிடவும் மோசமான நெரிசல் தாம்பரம் தொடங்கி உளுந்தூர்பேட்டை வரை இருக்கும். வரும் போதும் அப்படித்தான் நெரிசல் மோசமாக இருக்கும். வெள்ளிக்கிழமை காரை எடுத்து ஞாயிறு இரவு காரில் சென்னை கிளம்பி வருவதற்கு உண்மையில் பெரிய தைரியம் வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+