பெங்களூரில் குறையும் ஆட்டோக்களின் எண்ணிக்கை! புதிய கட்டுப்பாடு போட்ட டிராபிக் போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் அங்கீகரிக்கப்படாத ஆட்டோ ரிக்‌ஷாகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து காவல்துறை புதிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதாவது, ஆட்டோக்களின் வெளிப்புறத்தில் ஒட்டுவதற்குச் சரிபார்ப்பு ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்கள், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் அங்கீகரிக்கப்படாத வாகனங்களை எளிதில் கண்டறிய உதவும் என போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர்

பெங்களூர் போக்குவரத்து காவல்துறையின் இணை ஆணையர் கார்த்திக் ரெட்டி இது குறித்த கூறுகையில், "இந்தத் திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. விரைவில் இதை நடைமுறைப்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

Bengaluru Police

QR குறியீடு டிஸ்ப்ளே கார்டு

இதேபோல், QR குறியீடு இணைக்கப்பட்ட டிஸ்ப்ளே கார்டுகளையும் ஆட்டோக்களுக்காக வெளியிட போக்குவரத்து காவல்துறை தயாராகி வருகிறது. 'அஸ்ட்ராம்' செயலியுடன் இணைக்கப்படும் இந்த கார்டுகளில், ஓட்டுநரின் புகைப்படம், முகவரி, தொடர்பு எண், உரிமம் மற்றும் வாகனப் பதிவு விவரங்கள் இடம்பெறும். இந்த கார்டுகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படவிருந்த நிலையில், சில தொழில்நுட்பக் கோளாறுகளால் தாமதமானது.

ஓட்டுநர்களுக்காக பிரத்யேக கார்டு

"ஜனவரி மாத இறுதிக்குள் இந்தக் கார்டுகள் பயன்பாட்டுக்கு வரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என ரெட்டி கூறியுள்ளார். ஒவ்வொரு ஓட்டுநரும் அவர்கள் வாடகைக்கு எடுக்கும் ஒவ்வொரு ஆட்டோவிற்கும் தனித்தனியான டிஸ்ப்ளே கார்டுகளை வைத்திருக்க வேண்டும். இந்தக் கார்டுகள் ஓட்டுநர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து ஆட்டோக்களுக்கும் முக்கியம்

கார்டில் உரிமையாளர்கள் பெயர் அல்லது ரென்டல் அக்ரீமென்ட் இணைக்கப்பட்டிருக்காது. இந்தச் சரிபார்ப்பு ஸ்டிக்கர்களும் QR குறியீடு இணைக்கப்பட்ட டிஸ்ப்ளே கார்டுகளும் சட்டவிரோத ஆட்டோக்களை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என கர்நாடக டிஜி&ஐஜிபி எம்.ஏ. சலீம் தெரிவித்தார். "பெங்களூருவில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் இந்த இரண்டு அடையாள ஆவணங்களும் கட்டாயமாக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.

ஆட்டோ கட்டணங்கள்

திட்டம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இதற்கு முன்னர் இதேபோல செயல்படுத்தப்பட்ட சில திட்டங்கள் சிக்கலை எதிர்கொண்டது என்பதையும் கவனிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆட்டோ கட்டணங்களுக்கான மீட்டர் மறுசீரமைப்பிலும் சிக்கல் நீடிக்கிறது.

மீட்டர் கட்டணம்

கடந்த மே மாதம் நிலவரப்படி, பெங்களூருவில் மொத்தம் 3.6 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. ஆனால், புதிய கட்டணங்களுக்கு ஏற்றவாறு தங்கள் மீட்டர்களைச் சரிசெய்தவை வெறும் 45,000 ஆட்டோக்கள் மட்டுமே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் 1.9 கி.மீ-க்கான அடிப்படை கட்டணம் ₹30 இலிருந்து ₹36 ஆக உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கி.மீ-க்கும் ₹15 இலிருந்து ₹18 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இருந்தும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

திடீர் ரெய்டு

"நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மீட்டர் சரிபார்ப்பு காலக்கெடுவை டிசம்பர் இறுதி வரை நீட்டித்தோம், ஆனால் ஓட்டுநர்களிடமிருந்து போதிய ஆதரவு இல்லை. இன்று முதல், புதிய கட்டணங்களுக்கு ஏற்றவாறு மீட்டர்களை சரிசெய்யாத ஆட்டோக்களை பிடிப்பதற்கான மூன்று நாள் தீவிர சோதனை நடத்தப்படும். குற்றம் செய்பவர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்படும்" என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+