பெங்களூரு வாணிஸ்ரீ.. 22 வயதில் இப்படியொரு முடிவா? தோழி அறைக்குள் சென்றதுமே அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை வேலை மூலம் சொந்தக் காலில் நிற்கத் துடித்தவர் 22 வயது வாணிஸ்ரீ... அப்போதுதான் கல்லூரித் தோழன் அபிஷேக் என்பவர் வாணிஸ்ரீயின் வாழ்வில் நுழைந்தார்.. உல்லாச அழைப்பு, அந்தரங்க போட்டோ என அடுத்தடுத்த மிரட்டல்களால் நிலைகுலைந்து போன வாணிஸ்ரீ, திடீரென இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார்.. என்ன நடந்த பெங்களூருவில்?

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ளது பெலாமக்கி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் 22 வயது பெண் வாணிஸ்ரீ... எப்படியாவது படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற லட்சியம் கொண்டவர் வாணிஸ்ரீ..

Bengaluru Vanisri News Bengaluru Woman News 22 Year Old Woman Bengaluru Crime News 22

பெங்களூரு வாணிஸ்ரீ

இதனால் சிவமொக்காவில் உள்ள கல்லூரியில் டிகிரி முடித்தார்.. பிறகு சொந்த ஊரை விட்டு பெங்களூருக்கு வேலை தேடி வந்தார்.. பிறகு எச்.எஸ்.ஆர். லே-அவுட் செக்டர்-1 பகுதியில் உள்ள, ஒரு பிரபல நகைக்கடையின் விற்பனை பிரிவில் வேலை கிடைத்துள்ளது. இதனால் அதே பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி, அந்த நகைக்கடையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

வாணிஸ்ரீ காலேஜில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இவரும் அபிஷேக் என்ற மாணவரும் நண்பர்களாகப் பழகியுள்ளனர். அதற்கு பிறகு வாணிஸ்ரீ பெங்களூருக்கு வேலைக்கு வந்துவிட்டார்..

உல்லாசத்துக்கு வரவேண்டும்

இந்நிலையில், அபிஷேக், வாணிஸ்ரீயை காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. ஆனால் வாணிஸ்ரீ இந்த காதலை ஏற்க உறுதியாக மறுத்துவிட்டார். இது அபிஷேக்குக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது..

உடனே தன்னிடம் இருந்த வாணிஸ்ரீயின் தனிப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களை அவரது செல்போனுக்கு அனுப்பி, தான் அழைக்கும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வர வேண்டும் என்று மிரட்டத் தொடங்கியுள்ளான். அப்படி வர மறுத்தால் அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, பெயரையே கெடுத்துவிடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

அபிஷேக் இப்படி மிரட்டியதுடன் மட்டுமல்லாமல், செல்போனில் நிறைய மெசேஜ்களை அனுப்பி, வாணிஸ்ரீயை டார்ச்சர் செய்துள்ளார்.. இதனால் நாளுக்கு நாள் வாணிஸ்ரீ, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

அவனை மட்டும் விட்டுடாதீங்க

இதனால் மானம் போய்விடுமோ என்ற பயத்தாலும் மனமுடைந்த வாணிஸ்ரீ, நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, அகாரா ஏரியில் குதித்து தற்கொலையும் செய்து கொண்டார்.

அன்று காலை வாணிஸ்ரீயின் அறைக்கு சென்ற தோழி, அங்கிருந்த கடிதத்தை கண்டு அரண்டுபோனார்.. அதில் அபிஷேக் தன்னைத் துன்புறுத்தியது முதல் அழைப்புகள் மற்றும் போட்டோக்களை காட்டி மிரட்டியது வரை விரிவாக எழுதியிருந்தார் வாணிஸ்ரீ..

அதுமட்டுமல்ல, "எனது குடும்பத்தின் மானத்தை காப்பாற்றவே இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளேன்.. அபிஷேக்கிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.. எனது குடும்பத்தை நான் மிகவும் நேசிக்கிறேன்.. அவர்களை என்னால் எப்போதுமே மறக்க முடியாது" என்றும் கண்ணீருடன் வாணிஸ்ரீ எழுதியிருந்தார்.

ஏரியில் கிடந்த வாணிஸ்ரீ

தோழி மூலம் தகவலறிந்த வாணிஸ்ரீயின் அக்கா பூஜா மற்றும் தங்கியிருந்த ஹாஸ்டல் உரிமையாளர், உடனடியாக பதறியடித்து வந்து ஏரியில் வாணிஸ்ரீயை தேடியிருக்கிறார்கள்.. பிறகு எச்.எஸ்.ஆர் லேஅவுட் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்படவே, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஏரிப் பகுதியில் தீவிரமாகத் தேடி வாணிஸ்ரீயின் உடலை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எஸ்கேப் ஆன அபிஷேக்

அக்கா பூஜா அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி அபிஷேக் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 108-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், அபிஷேக் இப்போது தலைமறைவாக உள்ளாராம். அதனால் அவரை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி கொண்டிருக்கிறார்கள்..

தன் குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த ஒரு இளம்பெண், எப்படியாவது சாதித்து முன்னேறி விட வேண்டும் என்று கனவுடன் இருந்த இளம்பெண், இன்று சடலமாகி கிடப்பது, அந்த பகுதியில் கொந்தளிப்பையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+