‛சிக்கன் ப்ரைட் ரைஸ்’க்கு உள்ளே அது என்ன? பெங்களூர் பெண் பரபர வீடியோ!
பெங்களூர்: பெங்களூரில் சோமேட்டோ மூலம் சிக்கன் ப்ரைட் ரைசுக்கு பதில் கரப்பான் பூச்சி ப்ரைட் ரைஸ் டெலிவரி செய்யப்பட்டதால் பெண் அதிர்ச்சியடைந்தார்.
தற்போதைய சூழலில் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு நாம் நமக்கு தேவையான உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆர்டர் செய்த அரை மணிநேரத்துக்குள் நமக்கு பிடித்த உணவு கையில் கிடைப்பதால் ஆண்டுதோறும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

இத்தகைய சூழலில் தான் பெங்களூரில் வசித்து வரும் பெண் ஒருவர் கடும் வயிற்று பசி ஏற்பட்டதை தொடர்ந்து சோமேட்டோ மூலம் ஆன்லைனில் சிக்கன் ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்த நிலையில் அந்த பார்சலை அவர் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன நடந்தது வாங்க பார்க்கலாம்.
பெங்களூரை சேர்ந்தவர் ஹர்ஷிதா. இவர் சோமேட்டோ மூலம் ஆன்லைனில் சிக்கன் ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தார். இவருக்கு கோரமங்களா 5வது பிளாக்கில் உள்ள ஹோட்டலில் இருந்து உணவு டெலிவரி செய்யப்பட்டது. சோமேட்டோ ஊழியர் ஹர்ஷிதாவின் முகவரிக்கு சிக்கன் ப்ரைட் ரைஸை டெலிவரி செய்தார். இதையடுத்து அவர் ஆசையாக சிக்கன் ப்ரைட் ரைஸை திறந்து பார்த்தார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சிக்கன் ப்ரைட் ரைஸில் கரப்பான்பூச்சி செத்து கிடந்தது. இதனை பார்த்து அவர் ஷாக்கானார். உடனடியாக அவர் கரப்பான்பூச்சியுடன் இருக்கும் சிக்கன் ரைஸை வீடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர் சோமேட்டோவின் நுகர்கோர் விவகாரத்துறை சிஇஓ தீபிந்தர் கோயல் மற்றும் சோமேட்டோவை டேக் செய்தார்.
@deepigoyal @jagograhakjago @zomato
— Harshitha (@Harshit99115881) December 12, 2023
I orderd chicken fried rice in zomato from restaurent "TAPRI BY THE CORNER". I got cockroach in my food.
Absolutely disgusted with my order! This is completely unacceptable and unhygienic. Need an immediate resolution. #Zomato #FoodSafety" pic.twitter.com/f0JEqpKNSJ
மேலும் அந்த பதிவில், ‛‛நான் தாப்ரி பை தி கார்னரில் இருந்து சிக்கன் ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்திருந்தேன். எனக்கு வந்த உணவில் கரப்பான்பூச்சி இருந்தது. இது வெறுப்பான அனுபவமாக உள்ளது. சுகாதாரமற்ற இந்த உணவை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்'' என தெரிவித்து இருந்தார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ஹர்சிதாவுக்கு ஆதரவாகவும், சோமேட்டோவுக்கு எதிராகவும் கமெண்ட்டுகள் பதிவிட்டனர்.
இதையடுத்து உடனடியாக சோமேட்டோ சார்பில் ரீப்ளை செய்யப்பட்டது. அதில், ‛‛இது உண்மையில் எதிர்பாராத சம்பவமாக நடந்துள்ளது. உங்கள் நிலைமையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களின் ஆர்டர் எண் மற்றும் தொடர்பு எண்ணை தனிப்பட்ட முறையில் அனுப்ப முடியுமா? இதனை சரிசெய்ய முயற்சிக்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சிக்கன் ப்ரைட் ரைஸில் இருந்த கரப்பான்பூச்சி வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications