வெளிநாட்டு நபருடன் டேட்டிங்.. நம்பி சென்ற பெங்களூர் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. இனி மறக்கவே மாட்டார்!
பெங்களூர்: பெங்களூரில் வெளிநாட்டு நபருடன் பேசி பழகிய பெண் ஒருவர் அவரை நம்பி ‛டேட்டிங்' செய்தார். இந்த ‛டேட்டிங்' நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் ‛பில்' வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் வெளிநாட்டு நபர் எஸ்கேப் ஆனார். இதனால் அந்த பெண் அனைத்து கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெங்களூர் உள்பட பெரிய பெரிய நகரங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் ‛டேட்டிங்' செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ‛டேட்டிங்'கிற்காக பல செயலிகள் உள்ளன. அந்த செயலிகளை பயன்படுத்தி தங்களின் மனம் கவர்ந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ‛டேட்டிங்' சென்று வருகின்றனர்.

அந்த வகையில் பெங்களூர் பெண், வெளிநாட்டு நபரை நம்பி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அதாவது பெங்களூரில் தங்கி பணியாற்றி வரும் இளம்பெண் Bumble எனும் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வருகிறார். இந்த செயலி மூலமாக ஓசினியா நாட்டின் பிஜி நகரை சேர்ந்த ஷாமல் எஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் டேட்டிங் செயலியில் தொடர்ந்து பேசி வந்தனர். இதனால் அந்த பெண் தனது செல்போன் எண்ணை பகிர்ந்தார். இருவரும் செல்போனில் பேசி வந்தனர். வாட்ஸ்அப்பில் ‛சாட்'டும் செய்தனர். இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அந்த பெண் எம்ஜிரோட்டில் சந்திக்க வரும்படி கூறினார்.
இதையடுத்து இருவரும் டேட்டிங்கிற்காக சென்றபோது அந்த பெண் சிக்கலில் மாட்டினார். எம்ஜி ரோட்டில் உள்ள பப் - உடன் கூடிய ரெஸ்டாரண்ட்டுக்கு இருவரும் சென்றனர். அவர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை ஆர்டர் செய்து பேசியபடி சாப்பிட்டனர். ‛பில்' வந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண்ணை விட்டுவிட்டு வெளிநாட்டு நபர் எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதையடுத்து ஊழியர்கள் அந்த பெண்ணை முறைத்து பார்த்துள்ளனர். இதனால் அந்த பெண் வேறுவழியின்றி பில் தொகையை செலுத்திவிட்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக, அந்த பெண் ‛போலி டேட்டிங் மோசடி' என்ற தலைப்பில் கூறியுள்ளதாவது: பம்பிள் (Bumble) செயலியில் ஷாமல்.எஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
ஓசினியா நாட்டின் பிஜி நகரை சேர்ந்தவர் அவர். அவர் இந்தியாவில் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படித்து படித்துள்ளார். அவரை பார்க்க உண்மையாக இருந்தார். அவரிடம் சாட் செய்தேன். நேர்மையாக இருந்தார். இதையடுத்து இருவரும் எம்ஜி ரோட்டில் உள்ள 'SkyDeck by Sherlock's'-ல் மீட் செய்ய முடிவு செய்தேன்.
இருவரின் டேட்டும் நன்றாக சென்று கொண்டிருந்தது. இறுதியாக பில் கொடுக்கும் நேரம் வந்தது. அப்போது அவர் திடீரென்று மாயமானார். சிகரெட்டுகள் வாங்க சென்றுவிட்டார். இதனால் நான் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இதில் சந்தேகம் ஏற்பட்டது எப்படி என்னவென்றால் ஊழியர்கள் அனைவரும் அவரை தெரிந்து வைத்திருந்தனர். அதோடு ஊழியர்கள் என்னை பலமுறை முறைத்து பார்த்தனர்'' என தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த பெண் அந்த நபருடன் வாட்ஸ்அப்பில் ‛சாட்' செய்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து உள்ளார்.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications