"அதை" காட்டி சேட்டை செய்த சபலிஸ்ட்.. கழற்றி அடித்து ஏறக் கட்டிய அதிரடி பெண்.. சூப்பர்!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெண்ணிடம் உறுப்பை காட்டி சேட்டை செய்துள்ளார் சபலிஸ்ட் ஒருவர்.. உடனே செருப்பை காட்டி அந்த இளைஞரை தெறிக்க விட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரின் டிஜேஹல்லி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இது அங்கிருந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகி, தற்போது இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.

 Bengaluru Woman sexually assaulted, and man arrested

கடந்த திங்கட்கிழமை விடிகாலையில் அங்குள்ள குறுக்கு சந்து வழியாக பெண் ஒருவர் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்.. அவருக்கு கிட்டத்தட்ட 45 வயதுக்கு மேல் இருக்கும்.. நைட்டி அணிந்துள்ளார்.. மேலே ஒரு துண்டை போர்த்தி கொண்டு நடந்து வருகிறார்.. அந்த சந்தில் யாருமே இல்லை.

அப்போது திடீரென ஒரு இளைஞன் பெண்ணை வழிமறித்து குறுக்கே நிற்கிறார்.. பிறகு ஏதோ பேசிக் கொண்டே தன்னுடைய பேன்டை கடகடவென முட்டி வரை கீழே இறக்குகிறார்.. இதை பார்த்து அதிர்ந்து போன அந்த பெண் செய்வதறியாமல் திகைத்து போய், அங்கிருந்து நகர முயல்கிறார்.

ஆனால், இளைஞரோ, அந்த பெண்ணை கட்டிப்பிடிக்க முயல்கிறார்.. இதைகொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண், அந்த இளைஞரின் பிடியில் இருந்து உடனே விடுவித்து கொள்கிறார்.. அப்போதும் அந்த இளைஞன் விடவில்லை.. பெண்ணின் அங்கங்களை தொட முயற்சிக்கிறான்.. ஆவேசம் அடைந்த அந்த பெண் உடனே தன்னுடைய செருப்பை கையில் எடுத்து ஏதோ திட்டுகிறார்.. எதையுமே அந்த இளைஞன் காதில் வாங்கவில்லை.

சுற்றுமுற்றும் பார்த்து கொண்டே, அங்கிருந்த ஒரு சுவற்றில் தள்ளி தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட முனைகிறார்.. உடனே கையில் இருந்த செருப்பால் அந்த இளைஞனை சரமாரியாக வெளுத்தெடுக்கிறார் அந்த பெண்.. அத்துடன் சத்தமாக கத்தி கூப்பாடு போடுகிறார்.. இதனால் செய்வதறியாமல் திகைத்த இளைஞன் பேன்ட்டை மாட்டிக் கொண்டே அங்கிருந்து தப்பி ஓடுகிறார்..

இந்த காட்சிகள் அத்தனையும் அந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.. இந்த வீடியோவின் அடிப்படையில் பார்த்த போலீசார் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தார்கள்... சோட்டு என்பது அவர் பெயராம்.. 20 வயதாகிறது! தற்போது இது சம்பந்தமாக வழக்கு பதிவும் செய்யப்பட்டு விசாரணை நடந்தாலும், இந்த வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+