நோ டிரைவர்.. பெங்களூர் சில்க்போர்டு - எலக்ட்ரானிக் சிட்டி - பொம்மசந்திரா மெட்ரோ ரயிலில் டிக்கெட் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இன்று ஆர்வி ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.1 கிலோமீட்டர் தொலைவுக்கான மஞ்சள் வழித்தடத்தில் புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாளை காலை 5 மணி முதல் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம். ஓசூர் ரோட்டில் பொம்மனஹள்ளி, சில்க்போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா உள்ளிட்ட இடங்களை இந்த மெட்ரோ இணைக்க உள்ள நிலையில் டிக்கெட் கட்டணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பர்பிள் வழித்தடத்தில் செல்லக்கட்டா - ஒயிட்பீல்டு (காடுகோடி) வரை 43.49 கிமீ, பச்சை வழித்தடத்தில் சில்க் இன்ஸ்டிடியூட் முதல் மாதவரா வரை 33.46 கிலோமீட்டர் வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

bengaluru-yellow-line-metro-train-what-is-the-metro-fare-between-rv-road-to-bommasandra-full-detai

இதையடுத்து இன்று மஞ்சள் வழித்தடத்தில் ஆர்வி ரோடு முதல் பொம்மசந்திராவில் உள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் வரை 19.1 கிமீ வரை இன்று பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து அதில் பயணித்தார். அவருடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், மாணவ-மாணவிகள் பயணித்தனர்.

இந்த மஞ்சள் வழித்தடத்தில் மொத்தம் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அதன்படி ஆர்வி ரோடு, ராகி குட்டா இன்டர்சேஞ்ச், ஜெயதேவா ஹாஸ்பிட்டல், பிடிஎம் லேஅவுட் இன்டர்சேஞ்ச், சென்ட்ரல் சில்க் போர்டு, பொம்மனஹள்ளி இன்டர்சேஞ்ச், ஹொங்கசந்திரா, கூட்லு கேட், சிங்கசந்திரா, ஹொசரோடு, பீரதின அக்ரஹாரா, எலக்ட்ரானிக் சிட்டி, இன்போசிஸ் பவுண்டேஷன் (கோனப்பன அக்ரஹாரா), ஹுஸ்கூர் ரோடு, பயோகான் ஹெப்பகோடி, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பொம்மசந்திரா என 16 ஸ்டேஷன்களை கொண்டு உள்ளது.

இந்த வழித்தடத்தில் முக்கிய ஐடி நிறுவனங்கள், உள்பட பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்த ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்க உள்ளது. இந்த வழித்தடங்களில் நாளை காலை 5 மணி முதல் மக்கள் பயன்பாட்டுக்காக டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் இயங்க உள்ளது. தினமும் காலை 5 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இருக்கும்.

முதற்கட்டமாக நாளை முதல் இந்த வழித்தடத்தில் 3 மஞ்சள் மெட்ரோ ரயில்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளது. இதனால் அரை மணிநேரத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. அதன்பிறகு 20 நிமிடத்துக்கு ஒருமுறை 4 ரயில்கள் இயக்கப்படும். 2026 மார்ச் மாதத்துக்கு 15 மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும். அந்த சமயத்தில் Peak Hours-ல் 5 நிமிடத்துக்கு ஒருமுறையும், Non Peak Hours-ல் 8 நிமிடத்துக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

* அதன்படி ஆர்வி ரோடு முதல் ராகி குட்டா வரை டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாகும்.

* ஆர்வி ரோடு - ஜெயதேவா மருத்துவமனைக்கு டிக்கெட் கட்டணம் 10 ரூபாய்

* ஆர்வி ரோடு - பிடிஎம் லே-அவுட் டிக்கெட் கட்டணம் ரூ.20

* ஆர்வி ரோடு - சென்ட்ரல் சில்க் போர்டு டிக்கெட் கட்டணம் ரூ.20

* ஆர்வி ரோடு முதல் பொம்மனஹள்ளி டிக்கெட் கட்டணம் ரூ.30

* ஆர்வி ரோடு முதல் கூட்லு கேட் டிக்கெட் கட்டணம் ரூ.40

* ஆர்வி ரோடு முதல் சிங்கசந்திரா டிக்கெட் கட்டணம் ரூ.50

* ஆர்வி ரோட்டில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி - பொம்மசந்திரா வரை டிக்கெட் கட்டணம் ரூ.60

மேலும் பர்பிள் வழித்தடமான ஒயிட்பீல்டில் இருந்து பொம்மசந்திரா வரை பயணிக்க வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம் ரூ.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்த டிக்கெட் கட்டணம் ரூ.10 என்ற அளவிலும், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.90 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+