Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் உட்பட.. கர்நாடகா முழுவதும் தடை செய்யப்படும் பைக் டாக்ஸி! அமைச்சருக்கு ரைடர்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பைக் டாக்ஸி தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், ஜுன் 15ம் தேதிக்குள் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை எதிர்த்தும், பைக் டாக்ஸிகளுக்கு என விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று, இரண்டு பெண்கள் உட்பட ஏறத்தாழ 100 பைக் டாக்ஸி ரைடர்கள் ஒன்று சேர்ந்து அம்மாநில போக்குவரத்து அமைச்சர் பி. ராமலிங்க ரெட்டியிடம் மனு ஒன்றை அளித்திருக்கின்றனர்.

Karnataka Bike taxi

அதில், பைக் டாக்ஸி தொடர்பாக வரையறைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "நாங்கள் பிழைப்புக்காக இந்த தொழிலை நடத்துகிறோம். சொற்ப ஊதியம்தான் கிடைக்கிறது. எங்களது வாடிக்கையாளர்களும் சாமானிய மக்கள்தான். எங்களுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் தேவையில்லை. நாங்கள் கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். எங்களை சட்டப்பூர்வமாக்குங்கள். எங்களுக்கான கொள்கைகளை வரையறை செய்யுங்கள்.

அரசு எந்த மாதிரியான கொள்கைகளை வரையறை செய்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். அதை பின்பற்ற தயாராக இருக்கிறோம். இப்போது வரை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை கவுரவமாகத்தான் நடத்துகிறோம்" என பைக் டாக்சி சங்கத்தின் தலைவர் ஆதி நாராயணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

"ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற பணியாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களும் தொழில் நோக்கத்திற்காக தங்களது வாகனங்களை பயன்படுத்துகின்றனர். எங்கள் வேலையில், பைக்குகளுக்கு ரூ.5 லட்சம் வரை இன்சூரன்ஸ் செய்திருக்கிறோம். இப்படி இருக்கும்போது எங்களை மட்டும் ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? கோவா போன்ற மாநிலங்களில் பைக் டாக்ஸிகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கின்றன. அப்படியெனில் இந்த மாநிலத்தில் முடியாதா? ஒரு மாநில அரசு இதற்காக சட்ட வரைமறைகளில் மாற்றம் செய்யும்போது, இன்னொரு மாநில அரசால் அதை செய்ய முடியாதா?

சட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். அரசு இதை செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

அதேபோல 5 ஆண்டுகளாக இந்த வேலையில் ஈடுபட்டுவரும் மற்றொரு ஊழியர் கூறுகையில், "பெங்களூரில் மட்டும் இந்த தொழிலை நம்பி சுமாராக 10,000 இளைஞர்கள் இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் முழுவதும் கணக்கிட்டால் 2-3 லட்சம் பேர் வரை இருப்பார்கள். இவர்களின் வாழ்வாதாரம் தற்போது அரசு கையில்தான் இருக்கிறது. நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட, யாருடைய பிழைப்பையும் கெடுக்கவில்லை.

நாங்கள் சுயமரியாதையுடன் வாழ்கிறோம். உழைக்கிறோம். உழைப்புக்கு ஏற்ப ஊதியத்தை பெறுகிறோம். அதை சட்டமாக்குவதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மனு குறித்து பைக் டாக்சி சங்க நிர்வாகிக்கள் கூறுகைளில், "எங்கள் கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுகொண்டார். ஆனால், எங்களுக்கு வேறு எந்த பதிலும் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களை போலவே, இங்கும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தினோம். என்ன செய்யு முடியுமோ, அதை செய்கிறேன் என அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால் நீதிமன்ற தடை இன்னமும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

சொந்த வாகனங்களை வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது என்பது போக்குவரத்து விதி. பைக்குகள் சொந்த வாகனங்களாகத்தான் இருக்கின்றன. எனவேதான் பைக் டாக்ஸி சட்ட சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+