பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூர் தெற்கு தொகுதி வேட்பாளர்.. பாஜக சஸ்பென்ஸ் ஓவர்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் தேஜஷ்வி சூர்யா போட்டியிட பாஜக தலைமை டிக்கெட் வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் அனந்தகுமார் மனைவி தேஜஸ்வினிக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் தெற்கு தொகுதியில் எம்பியாகவும், மோடி அரசில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமாக இருந்தவர், ஆனந்தகுமார். ஆனால், கேன்சர் காரணமாக கடந்த வருடம், நவம்பரில் அனந்தகுமார் மரணமடைந்தார்.

BJP fields Tejasvi Surya from high-profile Bangalore South seat

இந்த நிலையில் அவரது மனைவி தேஜஸ்வினி ஆனந்தகுமாருக்கு, பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க மாநில தலைவர் எடியூரப்பா விரும்பினார். ஆனால், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பசவனகுடி சட்டசபை தொகுதி எம்எல்ஏ ரவி சுப்பிரமணியா உறவுக்காரரும், பாஜக இளைஞரணி செயலாளரான தேஜஸ்வி சூர்யாவை களமிறங்க விரும்பினார்.

40ம் நமக்கே.. அபார வெற்றி பெறுவோம்.. தீவிப் பிரச்சாரத்தில் கார்த்தி சிதம்பரம் 40ம் நமக்கே.. அபார வெற்றி பெறுவோம்.. தீவிப் பிரச்சாரத்தில் கார்த்தி சிதம்பரம்

இதனால் இழுபறி நீடித்த நிலையில் தேஜஷ்வி சூர்யாவிற்கு, போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது பாஜக தலைமை. அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் அனந்தகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் பெங்களூர் தெற்கு தொகுதியில், மூத்த தலைவர், பி.கே.ஹரிபிரசாத் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Putting an end to all speculation, the BJP has fielded youth leader Tejasvi Surya from the Bangalore South constituency. The constituency was held by the late Ananth Kumar. Surya is the general secretary of the BJP's youth wing and also an advocate. The BJP had maintained suspense over this seat and there was speculation rife that Prime Minister Narendra Modi would contest from Bangalore South.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X