ஹிஜாப் பிரச்சனையின் “மாஸ்டர் மைண்ட்”.. பாஜக கொடுத்த கிப்ட்! கர்நாடக வேட்பாளர் பட்டியலில் சுவர்னா

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிடும்
189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜகவின் தலைமை வெளியிட்டு உள்ள நிலையில், அம்மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனையை முதன்முதலில் கிளப்பி பிரபலமான யஷ்பால் சுவர்னாவுக்கு உடுப்பி சட்டமன்ற தொகுதியில் முதல்முறையாக போட்டியிட வாய்ப்பு அளித்து இருக்கிறது பாஜக தலைமை.

BJP gave seat to Suvarna in Karnataka election who initiated Hijab controversy

ஹிஜாப் பிரச்சனை: கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் கர்நாடக மாநிலத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., ஏபிவிபி, விஎச்பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். அதன் தொடர்ச்சியாக உடுப்பியில் உள்ள அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்ததால் அங்கு பயின்ற 6 இஸ்லாமிய மாணவிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர். இந்த மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதிக்க மறுபக்கம் ஏபிவிபி உள்ளிட்ட இந்துத்துவ மாணவர் அமைப்பினர் ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்களை கையில் எடுத்தனர்.

BJP gave seat to Suvarna in Karnataka election who initiated Hijab controversy

வன்முறையும் போராட்டமும்: இதற்கிடையே கர்நாடக மாநில பாஜக அரசோ, கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆடைகளை அணியக்கூடாது என்றும் முழுமையாக சீருடையை பின்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி அமைப்பினர் காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் கல்லூரியை விட்டே வெளியேற்றப்பட்டனர். இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவிய நிலையில் கர்நாடகாவில் மத வன்முறை வெடித்தது. ஹிஜாப் அணிந்து செல்லும் மாணவிகளுக்கு ஆதரவாகவும், கர்நாடக அரசை கண்டித்தும் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.

BJP gave seat to Suvarna in Karnataka election who initiated Hijab controversy

சுவர்னாவுக்கு பாஜக சீட்: இதனை எதிர்த்து உடுப்பி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கர்நாடக அரசு பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மே மாதம் நடைபெற உள்ள கர்நாடக தேர்தலில் ஹிஜாப் பிரச்சனை முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் இன்று கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு உள்ளது. 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் யஷ்பால் சுவர்னா என்ற பெயரும் இடம்பெற்று இருக்கிறது. உடுப்பியில் ஹிஜாப் பிரச்சனையை முதன்முதலில் கிளப்பியவர் இவர்தான். உடுப்பி தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி பட்டுக்கு இம்முறை சீட் வழங்காமல் சுவர்னாவை அங்கு பாஜக தலைமை நிறுத்தி உள்ளது. ஹிஜாப் பிரச்சனையின் மூலம் அப்பகுதி இளம் தலைமுறை பாஜகவினர் மத்தியில் பிரபலமான யஷ்பால் சுவர்னா, பசு பாதுகாப்பு விவகாரங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+