லஞ்சம் வாங்கிய வழக்கில் பாஜக எம்.எல்.ஏ அதிரடி கைது.. மகன் கையும் களவுமாக சிக்கிய நிலையில் ஆக்‌ஷன்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மடால் விருபக்‌ஷப்பா லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். விருபக்க்ஷப்பாவின் முன் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கும் போது பாஜக எம்.எல்.ஏ மடால் விருப்பக்ஷப்பாவின் மகன் கையும் களவுமாகச் சிக்கி கைது செய்யப்பட்ட நிலையில், வீட்டில் நடத்திய ரெய்டில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மடால் விருப்பக்ஷப்பா இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ

கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் மடால் விருபக்‌ஷப்பா. இவர் கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவன தலைவராக உள்ளார். அவரது மகன் பிரசாந்த், சோப் நிறுவனத்தின் ரூ.3 கோடி மதிப்பிலான டெண்டர் ஒதுக்க தனியார் நிறுவனத்திடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நிறுவனத்தினர் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுக்க பெங்களூரில் உள்ள பிரசாந்த் அலுவலகத்துக்கு வந்தனர். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

கையும் களவுமாக

கையும் களவுமாக

அப்போது 3 பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.40 லட்சம் லஞ்சப் பணத்தை கைப்பற்றினர். கையும் களவுமாகச் சிக்கிய பாஜக எம்.எல்.ஏவின் மகன் பிரசாந்த் சில ஆவணங்களை கசக்கி வாயில் போட்டு விழுங்க முயன்றபோது அதிகாரிகள் தடுத்தனர். மேலும் அதிகாரிகள் டாலர்ஸ் காலனியில் உள்ள பிரசாந்த்தின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.6 கோடியை கைப்பற்றினர். இதேபோல பாஜக எம்எல்ஏ மாதல் விருபக்ஷப்பாவின் அலுவலகத்தில் சுமார் ரூபாய் ஒன்றரைக் கோடி பணம் சிக்கியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் பிரசாந்த்தை கைது செய்தனர்.

கைது

கைது

எம்.எல்.ஏ விருபக்‌ஷப்பாவின் மகன், லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கடந்த மார்ச் 7ஆம் தேதி மடால் விருபக்‌ஷப்பாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி நடராஜன் சன்னகிரி சட்டமன்ற உறுப்பினர் விருபக்‌ஷப்பாவின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடால் விருபக்‌ஷப்பா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ

பாஜக எம்.எல்.ஏ

கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதி தொகுதியில் இருந்து 2008ல் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார் விருபக்‌ஷப்பா. 2013ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாட்டாள் ராஜண்ணாவிடம் தோல்வியடைந்தார். பிறகு 2018ல் மீண்டும் அதே தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது விருபக்‌ஷப்பாவுக்கு ரூ.5.73 கோடி சொத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+