தேசிய கொடிக்கு பதில் காவி கொடி.. சிக்கலில் கர்நாடக அமைச்சர்! சட்டசபையில் இரவு பகலாக காங்கிரஸ் தர்ணா
பெங்களூர்: டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும் என பேசிய பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவின் அமைச்சர் பதவியை பறிக்க கோரி கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரவில் தூங்கினர். தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதலமைச்சராக உள்ளார். இவரது அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர் ஈஸ்வரப்பா. இவர் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையை நிர்வகித்து வருகிறார். ஈஸ்வரப்பா சர்ச்சைக்கு பெயர் பெற்றவர்.
சமீபத்திய ஹிஜாப் பிரச்னைக்கு மத்தியில் டெல்லி செங்கோட்டையில் காவிகொடி ஏற்றப்படும் காலம் வரலாம் என ஈஸ்வரப்பா பேசினார்.

தேசியக் கொடி
செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவி கொடி ஏற்றுவதாக ஈஸ்வரப்பா தெரிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஈஸ்வரப்பாவை அமைச்சரைவில் இருந்து நீக்க வேண்டும் என சட்டசபை கூட்டத்தொடரிலும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.

தர்ணா
இந்த விவகாரத்தில் நேற்று சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா, தேசியக்கொடியை பிடித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேசியக்கொடி பயன்படுத்த கூடாது என கூறினார். தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் இருக்கை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது இரங்கல் தீர்மானம் கொண்டு வந்ததால், அது முடியும் வரை காங்கிரசார் சற்று அமைதியாயினர். பின் மீண்டும் ஆக்ரோஷமடைந்து பா.ஜ.,வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

சட்டசபையில் தூங்கிய காங்கிரஸ்
மேலும் ஈஸ்வரப்பாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி நேற்று இரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள்(கர்நாடக மேலவை உறுப்பினர்கள்) சட்டசபையில் இரவு நேர தர்ணாவில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் சித்தரமையா, காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இரவில் சட்டசபையிலேயே படுத்து தூங்கினர். அரசு தரப்பில், மெத்தை, தலையணை, உணவு, குடிநீர், போர்வை வழங்கப்பட்டது.

விவாத பொருள்
மேலும் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். இந்த விவகாரம் ஹிஜாப் பிரச்னை ஆகியவற்றால் கர்நாடக அரசியல்களம் விவாதபொருளாக மாறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications