பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிக்னலில் நிற்காத பிஎம்டபிள்யூ கார்..பறந்து சென்ற பாஜக எம்எல்ஏ மகள் - போலீசை மிரட்டியதால் பரபரப்பு

பாஜக எம்எல்ஏ அரவிந்த் நிம்பாவலியின் மகள் வெள்ளை நிற பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்தார். போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறமாக மாறியபோதும் அவள் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகள், பிஎம்டபிள்யூ காரில் போக்குவரத்து சிக்னலைத் தாண்டிய பெங்களூரு போலீஸாரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த செய்தியாளரிடமும் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக எம்எல்ஏ அரவிந்த் நிம்பாவலியின் மகள் வெள்ளை நிற பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்தார். போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறத்திற்கு மாறியபோதும் அவரது கார் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.

BJP MLAs daughter flees after BMW car does not stop at signal in Bengaluru

போக்குவரத்து காவல்துறையினர் அவரைத் தடுத்தபோது, அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், மேலும் அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்ல பார்த்தீங்களா? உபி பள்ளிகளில் மராத்தி கற்று கொடுக்கனுமாம் யோகிக்கே லெட்டர் போட்ட பாஜக பிரமுகர்தில்ல பார்த்தீங்களா? உபி பள்ளிகளில் மராத்தி கற்று கொடுக்கனுமாம் யோகிக்கே லெட்டர் போட்ட பாஜக பிரமுகர்

நான் யார் தெரியுமா? என்று போலீஸ்காரர்களிடம் அவர் கேட்டு மிரட்டினார். இருப்பினும், போலீசார் அவரது மிரட்டலை புறக்கணித்தனர். சிறிது நேரம் வாக்குவாதம் நடந்ததால், ராஜ்பவன் முன் சாலையில் ஏராளமானோர் திரண்டனர்.

சிக்னலில் நிற்காமல் விதிமுறைகளை மீறிய அந்த பெண்ணுக்கு போக்குவரத்து காவல்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

English summary
BJP MLA Arvind Nimbavali's daughter was driving a BMW when she jumped a signal. She did not stop when the traffic light.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X