நாங்க 80%.. நீங்க 17%தான்.. இறங்குனா என்னாகும் தெரியுமா.. முஸ்லீம்களை மிரட்டிய பாஜக எம்எல்ஏ
பெங்களூர்: நாங்கள் 80 சதவீதம் பேர் இருக்கோம். சிறுபான்மையினராகிய நீங்கள் வெறும் 17 சதவீதம்தான், உங்களுக்கு எதிராக நாங்கள் திரும்பி வீதிக்கு வந்தால் என்னவாகும்னு கற்பனை செய்து பாருங்கள் என கர்நாடக பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி மிரட்டும் தொனியில் பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குடியுரிமை சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சட்டம் குறித்து பாஜக சார்பில் விளக்கம் அளித்தும், அதை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துள்ளனர். பெல்லாரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி பேசினார்.

17 சதவீதம்
அப்போது அவர் கூறுகையில் நாங்கள் 80 சதவீதம் பேர் இருக்கிறோம். நீங்களோ வெறும் 17 சதவீதம்தான். நாங்கள் உங்களுக்கு எதிராக திரும்பினால் என்னவாகும் என கற்பனை செய்யுங்கள். இது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோருக்கு எனது எச்சரிக்கை.

களத்திற்கு வருவோம்
இந்த போராட்டக் களத்தில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறீர்கள். மேலும் மேலும் பிரச்சினையை பெரிதாக்கி இடையூறு செய்தால், முற்பட்ட வகுப்பை சேர்ந்த 100 சதவீதம் பேர் போராட்டக் களத்திற்கு வருவோம். அப்படி வந்தால் என்னவாகும் உங்களுக்கு?

எச்சரிக்கை
போராடும் மக்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களே ஆகிறது. இது போன்று நாடகங்களை நடத்தினால் அவ்வளவுதான் என மிரட்டும் தொனியில் பேசினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா எம்எல்ஏ சோமசேகருக்கு எதிராக பெங்களூரில் உள்ள மாநில டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ரெட்டிக்கு எதிராக வழக்கு பதிவு
அதில் ஜாதி கலவரத்தைத் தூண்டுவிடும் வகையில் பேசிய சோமசேகர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து மத கலவரத்தை தூண்டிவிடும் வகையில் பேசிய ரெட்டிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications