ச்சீ... தங்க கடத்தல் நடிகை ரன்யா பற்றி ஒரு எம்எல்ஏ இப்படி கொச்சையாக பேசுவதா? பாஜகவுக்கு அசிங்கம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தங்க கடத்தலில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் குறித்து கர்நாடகா பாஜக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான பசன்கவுடா பாட்டீல் யத்னால் ஆபாசத்தின் உச்சமாக விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. பாஜக எம்.எல்.ஏ.வின் இத்தகைய விமர்சனம் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா அரசியலை அதகளப்படுத்தி வருகிறது தங்க கடத்தல் நடிகை ரன்யா விவகாரம். ரன்யா ராவுக்கு முந்தைய பாஜக அரசு, 12 ஏக்கர் நிலத்தை தாரை வார்த்தது என்பது தற்போதைய காங்கிரஸ் அரசின் குற்றச்சாட்டு. ஆனால் பாஜகவோ, ரன்யா ராவுடன் தற்போதைய அமைச்சர்களுக்குதான் தொடர்பு இருக்கிறது என்கிறது.

karnataka crime ranya rao bjp

இது தொடர்பாக பசன்கவுடா பாட்டீல் யத்னால் கூறியதாவது: ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? எத்தனை அமைச்சர்களுக்கு தொடர்பிருக்கிறது என்கிற விவரத்தை சட்டசபையில் வெளியிடுவேன். ரன்யா ராவ் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்கிற விவரங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறேன்.

ரன்யா ராவுக்கு யார் பாதுகாப்பு கொடுத்தது? ரன்யா ராவ் எப்படி இத்தனை முறை பிரச்சனையே இல்லாமல் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தார் என்கிற விவரங்களையும் சட்டசபையில் அம்பலப்படுத்துவேன். அத்துடன் ரன்யா ராவ் எப்படி எல்லாம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தார் என்கிற விவரத்தையும் சொல்லப் போகிறேன். ரன்யா ராவைப் பொறுத்தவரை உடலின் அனைத்து பாகங்களிலும் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்துள்ளார். இவ்வாறு
பசன்கவுடா பாட்டீல் யத்னால் கூறினார்.

மேலும் ரன்யா ராவ் தமது உடலில் எப்படி எல்லாம் தங்க கட்டிகளை கடத்தினார் என எழுத்தில் எழுத முடியாத வார்த்தைகளிலும் செய்தியாளர்களிடம் பசன்கவுடா பாட்டீல் யத்னால் கூறியதுதான் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.முன்னாள் அமைச்சராகவும் இந்நாள் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கும் பசன்கவுடா பாட்டீல் யத்னால் , பொதுவெளியில் ஒரு பெண்ணை பற்றி இழிவாக குறிப்பிட்டு பேசியதுதான் சர்ச்சையாகி உள்ளது. இது பாஜகவுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் வாகா படத்தில் நடித்தவர் ரன்யா ராவ். இவரது வளர்ப்பு தந்தை கர்நாடகா மாநில டிஜிபியாக இருப்பவர். துபாயில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வருவதையே தொழிலாக வைத்திருந்த ரன்யா ராவை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சிறையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி இருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+