கடும் விமர்சனம் எழுந்ததால்.. பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் கட்டண தடுப்பூசி முகாம் ரத்து!
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கட்டண தடுப்பூசி முறையாகும்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியையும் முறையாக செயல்படுத்த முடியவில்லை..

இந்த நிலையில் பெங்களுருவில் சிறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மனைகளுடன் இணைந்து கட்டண முறையில் தடுப்பூசி போட பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திட்டமிட்டார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகா தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நேரத்தில் தேஜஸ்வி சூர்யா இந்த வழியில் எவ்வாறு தடுப்பூசி போட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையை உருவாக்கி, தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதாக கர்நாடக அரசு மீது பலரும் குற்றம்சாட்டினார்கள். இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது சமூக ஊடகங்களில் பொங்கியெழுந்தனர். கடும் விம்சர்சனம் காரணமாக பெங்களுரு ஷாலினி மைதானத்தில் நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் தெரிவித்துள்ள தேஜஸ்வி சூர்யா, தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாகவும் மருத்துவமனையில் பதிவு விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். பெங்களூரில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் இத்தகையதடுப்பூசி திட்டங்களை நடத்தி வருவதாக அவரது அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications