தர்மஸ்தலா விவகாரத்தில்.. பொய்களை சொல்ல பணத்தை அள்ளி வீசியது யார்? பரபரப்பை கிளப்பிய தேஜஸ்வி சூர்யா
பெங்களூர்: கர்நாடக தர்மஸ்தலா விவகாரத்தை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்த கர்நாடக அரசின் முடிவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். இந்துக்களின் முக்கிய புனிதத் தலமான தர்மஸ்தலா குறித்து சிலர் பொய்களைப் பரப்பி வருவதாகவும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதைக் கண்டறிந்த இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா விவகாரத்தில் பெண்களைப் புதைத்ததாக மாஜி துப்புரவு ஊழியர் சொன்ன குற்றச்சாட்டுகள் குறித்து அம்மாநிலச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்தது. இருப்பினும், அந்த நபர் கூறியது உண்மை இல்லை என்று தெரிய வந்ததால் அந்த நபரையே போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது.

தேஜஸ்வி சூர்யா
இதற்கிடையே தர்மஸ்தலா விவகாரத்தில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கர்நாடக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், தர்மஸ்தலா எதிராகப் பொய்களைப் பரப்பப் பணம் கொடுத்தவர் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
5 கேள்விகள்
மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழு அவசர அவசரமாக அமைக்கப்பட்டது ஏன் என்றும் தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தர்மஸ்தலா விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் 5 கேள்விகளை முன்வைக்கிறேன்.
அவசரம் காட்டியது ஏன்?
1. மாஸ்க் நபர் சொன்ன குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது பார்த்தாலே தெரிகிறது. இருப்பினும், உங்கள் அரசு அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொண்டது. முதற்கட்ட விசாரணையை முதலில் நடத்தலாம் எனச் சில மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறிய போதிலும், அதைப் புறக்கணித்துவிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை உங்களால் அறிய முடியவில்லையா, அல்லது நீங்களும் இந்தச் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தீர்களா?
இதேபோன்ற குற்றச்சாட்டுகள் வேற்று மத அமைப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தால், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பதில் இவ்வளவு அவசரத்தையும் காட்டியிருப்பீர்களா?
2. டெல்லியின் "அறிவுறுத்தலின்" பேரிலேயே சிஐடி அமைக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள்.. உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் அழுத்தம் கொடுத்தது யார்? இந்த முடிவை எடுக்கச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தியது யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
நிதி கொடுத்தது ஏன்?
3. யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் உள்ளிட்டவை பொய்ச் செய்திகளைப் பரப்பின.. லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் மூத்த வழக்கறிஞர்கள் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்காக ஆஜரானார். இதுவே இதற்குப் பின்னால் பணம் விளையாடியுள்ளதைக் காட்டுகிறது. இந்தச் சதித்திட்டத்திற்கு நிதி கொடுத்தது யார்.. இதை நடத்தியது யார்.. இது குறித்து உங்கள் அரசு விசாரிக்காதது ஏன்?
4. கர்நாடக மாநிலத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நபர்களும் இந்தச் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), இப்போது அதற்குப் பின்னால் இருக்கும் சதிகாரர்களை அம்பலப்படுத்தும் பணியைச் செய்ய முடியாது. உங்கள் மனசாட்சி தெளிவாக இருந்தால், ஏன் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கூடாது? சிறப்புப் புலனாய்வுக் குழுவை அவசரமாக அமைத்ததைப் போலவே, ஒரு நியாயமான விசாரணைக்கும் அதே அவசரத்தைக் காட்டுவீர்களா? அல்லது சிபிஐ விசாரணைக்கும் உண்மைகளுக்கும் உங்கள் அரசு அஞ்சுகிறதா?
பிரிவினை அரசியல்
5. உங்கள் அரசு, கடலோர கர்நாடகாவில் சமூக விரோத டாஸ்த் போர்ஸ்ஸை களமிறக்கியுள்ளது. ரோஹித் வெமுலா சட்டம் போன்ற பிரிவினைவாத சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இவை எல்லாம் ஒரு இந்துவை மற்றொரு இந்துவுக்கு எதிராக நிறுத்துகின்றன.. குறிப்பாக ராகுல் காந்தியின் தூண்டுதலின் பேரில் இது நடக்கிறது.
தர்மஸ்தலா சர்ச்சை சனாதன தர்மத்தைப் பலவீனப்படுத்தவும், இந்து சமூகத்தைப் பிளவுபடுத்தவும் நடக்கும் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தானே? தர்மஸ்தலாவை இழிவுபடுத்தும் இந்தப் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்திக்கு பங்கு இருக்கிறதா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications