"அதிமுக ஒரு குடும்ப கட்சி.." பொது கூட்டத்தில் சொன்ன பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா.. ஒரே பரபரப்பு

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூட்டம் ஒன்றில் பல்வேறு கட்சிகளையும் கடுமையாகச் சாடினார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சிகளே என்று சாடினார்.

கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அங்கு பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், ஆட்சியைத் தக்க வைக்கவே பாஜக விரும்புகிறது.

ஏனென்றால், தென்மாநிலங்களில் இப்போது பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாகக் கர்நாடகா இருக்கிறது. இதனால் அங்கு எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்கவை பாஜக முயல்கிறது.

 கர்நாடக தேர்தல்

கர்நாடக தேர்தல்

கடந்த சில காலமாகவே பல முக்கிய பாஜக தலைவர்களும் கர்நாடகாவுக்குச் சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கக் கர்நாடகாவுக்கு சில வாரங்களில் பல முறை சென்றிருந்தார்.. இதற்கிடையே இப்போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். பாஜக வலிமையாக உள்ள கர்நாடகாவின் கடற்கரை மாவட்டங்களில் ஒன்றான உடுப்பிக்கு சென்ற நட்டா, அங்குப் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு விவகாரங்கள் விரிவாகப் பேசினார்.

 ஜேபி நட்டா

ஜேபி நட்டா

உடுப்பியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜேபி நட்டா, "அமெரிக்காவில் இப்போது 76% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் தான் பைடன் பொது இடங்களில் இப்போதும் மாஸ்க் போடுகிறார். ஐரோப்பாவில் கூட 67% பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. இதுவரை இந்தியாவில் 220 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இப்போது நான் உங்களைப் பார்க்கிறேன். நீங்கல் மாஸ்க் அணியாமல் நெருக்கமாகத் தானே அமர்ந்துள்ளனர்.

 கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின்

பூஸ்டர் டோஸ்கள் உட்பட 220 டோஸ் வேக்சின்களை இலவசமாகப் போட்டுள்ளோம். இந்தியாவில் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட போது, காங்கிரஸ் தலைவர்கள் மக்களைத் தவறாகவே வழிநடத்தினர். சசி தரூர் தாங்கள் ஒன்றும் சோதனை பன்றிகள் இல்லை என்றெல்லாம் கூறினார். காங்கிரஸின் பல முக்கிய தலைவர்கள் வேக்சின் பணிகளை விமர்சித்தனர். இப்போது நம் நாட்டின் வேக்சின் பணிகள் வெற்றியடைந்துள்ளது. இதற்கு அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்.

 பல்வேறு நடவடிக்கைகள்

பல்வேறு நடவடிக்கைகள்

பொதுவெளியில் காங்கிரஸ் தலைவர்கள் இப்படிச் சொன்னாலும் கூட தனிப்பட்ட முறையில் ரகசியமாக அவர்கள் வேக்சினை எடுத்துக் கொண்டார்கள். இது மட்டுமின்றி உக்ரைன் போர் சமயத்தில் அங்குச் சிக்கியவர்களைப் பத்திரமாக மீட்டு வந்துள்ளோம். இப்போது சர்வதேச அளவில் 6ஆவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது..விவசாயிகள், பெண்கள், ஏழைகள், தலித், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அதிகாரம் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

 பாஜக கர்நாடகா தொடர்பு

பாஜக கர்நாடகா தொடர்பு

பாஜக கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா அதிகாரம் பெற்றுள்ளது.. பெரிய நீண்ட பாய்ச்சலை அடையத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பாஜகவின் வரலாற்றில் உடுப்பிக்கு தனி இடம் கிடைத்துள்ளது. முதல் உடுப்பி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் 1968இல் நடந்த நிலையில், அதில் பாஜக தான் வென்றது. அந்த நேரத்தில் அதுதான் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக பாஜகவுக்கு இருந்தது.

 அதிமுக ஒரு குடும்ப கட்சி

அதிமுக ஒரு குடும்ப கட்சி

இன்று பாஜகவை தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகளாகவே உள்ளன... ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கையில் தான் அனைத்து கட்சிகளும் உள்ளன. காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாதி, சிவசேனா (உத்தவ் தாக்கரே), திரிணாமுல் காங்கிரஸ், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஆர்எஸ், அதிமுக என்று அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.. ஜூன் 2022 இல் பிரதமர் ரூ. 33000 கோடி வழங்கிய திட்டங்கள் கர்நாடகாவை இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரமாக மாற்றவுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+