உச்ச நீதிமன்றத்தில் இலவசங்களை எதிர்த்துவிட்டு.. கர்நாடகாவில் அள்ளி கொடுத்த பாஜக! பரபர வாக்குறுதி
பெங்களூர்: தேர்தல் சமயத்தில் இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுப்பதை கடுமையாக எதிர்த்த பாஜக, கர்நாடக சட்டசபை தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது.

பாஜக கடும் எதிர்ப்பு : இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பாஜக இலவச திட்டங்களை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இலவச வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றுகிறது.
இலவசங்கள் காரணமாக மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
இலவசங்கள் காரணமாக மக்கள் உழைப்பு குறைகிறது.
இலவசங்கள் தேர்தல் சமயங்களில் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படுகிறது.
இலவசங்கள் காரணமாக மக்களுக்கான மற்ற திட்டங்களை நிறைவேற்ற போதிய பொருளாதாரம் இல்லாத நிலை ஏற்படும் என்றெல்லாம் பாஜக வாதங்களை வைத்தது.
பாஜக வாக்குறுதி:
உச்ச நீதிமன்ற வழக்கில், தேர்தல் சமயத்தில் இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுப்பதை கடுமையாக எதிர்த்த பாஜக, கர்நாடக சட்டசபை தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கி உள்ளது.
பாஜக அறிவித்த இலவச திட்டங்கள் பின்வருமாறு,

நந்தினி நிறுவனத்தின் பால் அரை லிட்டர் இலவசமாக ஏழைகளுக்கு வழங்கப்படும்
கர்நாடகாவில் உள்ள பழமையான கோவில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
5 கிலோ அரிசி, பருப்பு இலவசமாக வழங்கப்படும்.
ஏழைகளுக்கு விநாயகர் சதுர்த்தி, தீபாவளியன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.
10 லட்சம் பேருக்கு கர்நாடகாவில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்படும்.
ஆகிய இலவச வாக்குறுதிகளை பாஜக அள்ளி வழங்கி உள்ளது.
குஜராத்: குஜராத் சட்டசபை தேர்தலிலும் பாஜக இதே போல இலவசங்களை அள்ளிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் சட்டசபை தேர்தலிலும் இலவசங்களை தேசிய இலவச அளவில் எதிர்க்கும் பாஜக குஜராத்தில் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜகவும் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியது. குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பாஜக "Agresar Gujarat Sankalp Patra 2022" என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது.
அதில் இலவச கல்வி கொடுப்போம், பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் பிஜி வரை கல்வி இலவசம் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. அதோடு, இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், சன்னா குறைந்த விலையில், குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் ஆகியவை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்தது.
தமிழ்நாட்டில் பைக் வழங்கும் திட்டத்தை காப்பி அடித்து பாஜக இந்த வாக்குறுதியை கொடுத்தது. இந்த இலவசங்கள் மூலம் ஆம் ஆத்மி மீது மக்கள் பார்வை திரும்பாமல் பாஜக பார்த்துக்கொண்டது. தேர்தலிலும் பாஜகவிற்கு இது பெரிய அளவில் உதவியது . அவங்க என்ன இலவசம் கொடுப்பது. நாங்கள் இலவசம் + இந்துத்துவா இரண்டையும் கொடுக்கிறோம் என்று பாஜக இரண்டு வகையான வாக்குறுதிகளையும் அள்ளிவிட்டு வென்றுள்ளது.
இதே அஸ்திரத்தை தற்போது கர்நாடகாவிலும் பாஜக களமிறக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications