பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Karantaka political crisis | எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக, வேறு கட்சி எம்எல்ஏக்களை பாஜகவில் சேர்க்க கூடாது என அந்த கட்சி தொண்டர்களே, கோரிக்கைவிடுத்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில், நடைபெற்று வரும், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த மற்றும் மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மொத்தம் 16 பேர், இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.

    இவர்கள் பின்னர் பாஜகவில் இணையும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல, பெங்களூர் நகரின் கே.ஆர்.புரம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பைரத்தி பசவராஜ் பாஜக இணைய திட்டமிட்டுள்ளதால், அதற்கு கே.ஆர்.புரம் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    குடிபோதையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ.. கட்சியில் இருந்து தூக்கி எறிய முடிவு குடிபோதையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ.. கட்சியில் இருந்து தூக்கி எறிய முடிவு

    கேஆர் புரம் நிலை

    கேஆர் புரம் நிலை

    அந்த தொகுதியின், பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நந்தீஷ் ரெட்டி, பாஜக தலைவர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து பசவராஜை சேர்க்க கூடாது என வலியுறுத்தினார். தொண்டர்களையும் உடன் அழைத்து சென்று எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்தார். பைரத்தி பசவராஜிடம் அடுத்தடுத்து தோற்றவர் நந்தீஷ் ரெட்டி. பாஜகவுக்கு பசவராஜ் வந்தால், தனக்கு அரசியலில் எதிர்காலமே இல்லை என்று அஞ்சி நடுங்குகிறார் நந்தீஷ் ரெட்டி. எனவே, தொண்டர்களை தூண்டிவிட்டு எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

    மகாலட்சுமி லேஅவுட்

    மகாலட்சுமி லேஅவுட்

    மற்றொரு பக்கம், பெங்களூர் நகரின், மகாலட்சுமி லேஅவுட் தொகுதியின் மஜத எம்எல்ஏ, கோபாலய்யா, பாஜகவில் சேர முயல்வதற்கும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். டாலர்ஸ் காலனி பகுதியிலுள்ள எடியூரப்பா வீட்டில் இன்று நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்து, கோபாலய்யாவை, பாஜகவில் சேர்க்க கூடாது என வலியுறுத்தினர்.

    காரணம் இதுதான்

    காரணம் இதுதான்

    பாஜக நிர்வாகியை கொலை செய்த குற்றச்சாட்டு கோபாலய்யா மேலே உள்ளது. இப்போது அமைச்சர் பதவிக்காக அவர் பாஜக வர முயற்சி செய்கிறார். கோபாலய்யாவை பாஜகவில் சேர்த்தால், மகாலட்சுமி லேஅவுட் தொகுதி பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைவார்கள் என்று எடியூரப்பாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பாஜகவுக்குதான் தலைவலி

    பாஜகவுக்குதான் தலைவலி

    பாஜகவினர் இவ்வாறு தொடர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதால், அக்கட்சி தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, பிற கட்சியினர் பாஜகவில் பதவிகளை பெற்றால், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் அல்லது எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அல்லது மஜதவுக்கு தாவக்கூடும். இது பாஜகவுக்குதான் தலைவலியாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    English summary
    BJP workers upset with the political developments, as many other party leaders wants to joint the saffron party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X