திடீரென மேடையை விட்டு தலைதெறிக்க ஓடிய மாப்பிள்ளை.. அப்பறம் நடந்ததுதான் ட்விஸ்ட்டே..!

மேடையில் இருந்து மணமகன் ஓடிப்போக, மணமகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கல்யாண பொண்ணு வெட்கப்பட்டு கொண்டு மேடையில் நின்று கொண்டிருக்கும்போது, திடீரென மாப்பிள்ளை அங்கிருந்து தலைதெறிக்க ஓடிவிட்டார்.. ஆனால் அதற்கு பிறகுதான் ட்விஸ்ட்டே..!

கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம் தரிகேர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நவீன்.. இவர்தான் அந்த மாப்பிள்ளை.. சிந்துஎன்ற பெண்ணை பேசி முடித்து கல்யாணத்திற்கு நாளும் இரு வீட்டினரும் குறித்தனர்.

 Bride Marries Guest After Groom Runs Away In Karnataka

அதன்படியே கல்யாணத்தன்று தடபுடல் ஏற்பாடும் நடந்தது.. இவர்களை வாழ்த்த ஊரே கூடி இருந்தது.. மணமகள் ஆயிரம் கனவுகளுடன் மேடையில் நின்றிருந்தார்.. அப்போதுதான் நவீன் பதறி அடித்து கொண்டு மேடையைவிட்டு கீழே இறங்கி ஓடினார்..

விஷயம் இதுதான்.. நவீன் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.. அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது.. அதனால் கல்யாணத்தன்று, நவீனுக்கு போன் செய்த அந்த காதலி, "இந்த கல்யாணத்தை நிறுத்துங்க.. இல்லாட்டி விஷம் குடிச்சிடுவேன், நேரில் வந்து எல்லார் முன்னாடியும் விஷயத்தை சொல்லிடுவேன்" என்று மிரட்டி உள்ளார்.. அதற்கு பயந்து கொண்டுதான், காதலியை பார்க்க அப்படி ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனால், கல்யாண பெண் சிந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.. அந்த மண்டமே கொஞ்ச நேரத்தில் பதறி போய்விட்டது.. இவர்கள் யாராலும் சிந்துவை சமாதானப்படுத்தவே முடியவில்லை.. அதனால் என்ன செய்வதென்று விழித்த சொந்தக்காரர்கள், அந்த கல்யாணத்துக்கு வந்திருந்த உறவுக்கார இளைஞனையே மண்டபத்தில் தேடினார்கள்.. எதிர்பார்த்தபடியே ஒருத்தர் கிடைத்தார்..

ஓடிப்போன மாப்பிள்ளையைவிட இவர் சிந்துவுக்கு ரொம்ப பொருத்தமானவராம்.. பெயர் சந்திரப்பா.. சிந்துவை கல்யாணம் செய்ய சந்திரப்பா ஒப்புக் கொள்ள, சந்திரப்பாவை சிந்துக்வுக்கும் அந்த செகண்டே பிடித்துபோக கல்யாணம் அமர்க்களமாக நடந்து முடிந்தது.

இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால், இந்த கல்யாணம் நடப்பதற்கு முந்தைய நாள் வரை, ஓடிப்போன மாப்பிள்ளை கோட் - சூட் போட்டுக் கொண்டு ஜம்மென்று போட்டோ ஷூட் நடத்தினாராம்.. கல்யாணத்தன்று காலைகூட சிரித்து கொண்டே ஹேப்பியாக இருந்தாராம்.. மணமேடைக்கு வந்தபிறகுன் அந்த போன் வந்திருக்கிறது போலும். இப்போது ஓடிப்போன அந்த மாப்பிள்ளையின் கோட்-சூட் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+