இதயத்தில் கோளாறு.. மருத்துவமனையில் சித்தராமையா.. அரசியல் பகை மறந்து விரைந்தார் எடியூரப்பா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, முதல்வரும், பாஜக சீனியர் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சித்தராமையாவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாம். இதையடுத்து பெங்களூருவிலுள்ள தனியயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நேரில் சென்று நேற்று நலம் விசாரித்தார்.

BS Yediyurappa Visits Congress Leader Siddaramaiah at hospital

எடியூரப்பாவுடன் மாநில அமைச்சர்கள் கே.எஸ். ஈஸ்வரப்பா மற்றும் பசவராஜ பொம்மை ஆகியோர் இருந்தனர்.

சித்தராமையாவின் இதய பிரச்சினை குறித்து, உறுதிப்படுத்திய அவரது மகன் யதிந்திரா கூறியதாவது: "எனது தந்தைக்கு இதயப் பிரச்சினை உள்ளது. டாக்டர் ரமேஷ் ஆரம்பத்தில் இருந்தே அவரைக் கவனித்து வருகிறார். முன்னதாக அவருக்கு இதேபோன்ற ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ரத்த ஓட்டம் அவரது இதயத்திற்கு சீராக போகவில்லையாம். எனவே மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவர் ஆஞ்சியோபிளாஸ்டிக் செய்யப்பட்டது" இவ்வாறு சித்தராமையா மகன் யதிந்திரா கூறினார்.

சமீபத்தில் நடந்த 15 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத் தேர்தலில், பாஜக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றன. இந்த தேர்தலின்போது சித்தராமையா தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார். ஓய்வின்றியும், தூக்கமின்றியும், சுற்றி திரிந்ததால், சித்தராமையாவின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அரசியலில் கடும் எதிராளிகளாக இருந்தபோதிலும், சித்தராமையாவுடன், எடியூரப்பா சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த படத்தை பாஜக டுவிட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+