Dams Level: என்னாது கர்நாடகா அணைகளில் தண்ணீரே இல்லையா? புழுகும் DKS! கபிணி நீர் மட்டத்தை பாருங்க!
பெங்களூர்: கர்நாடகா அணைகளில் போதுமான நீர் இல்லை என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் பச்சை பொய் தெரிவித்திருக்கும் நிலையில் அங்குள்ள அணைகளின் நீர் மட்டம் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் கர்நாடகா அணைகளில் போதுமான நீர் இல்லை என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது. காவிரி ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை குறித்து விவாதிக்க வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது என அறிவித்துள்ளார்.

கர்நாடக அணைகளின் நீர் மட்டம் எவ்வளவு என்பதை பார்த்ததும் டி.கே. சிவக்குமார் பச்சை பொய் கூறியிருப்பது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் ஹாரங்கி அணையின் அதிகபட்ச நீரின் கொள்ளளவு 129 அடியாகும். ஆனால் இன்றைய நிலவரப்படி (ஜூலை 30)இங்கு 127.55 அடியாக நீர் மட்டம் உள்ளது.
ஹேமாவதி அணையின் அதிகபட்ச நீரின் கொள்ளளவு 117 அடியாகும். ஆனால் இன்றைய நிலவரப்படி இங்கு 100.98 அடியாக நீர் மட்டம் உள்ளது.
கபிணி அணையின் அதிகபட்ச நீரின் கொள்ளளவு 65 அடியாகும். ஆனால் இன்றைய நிலவரப்படி இங்கு 56 அடியாக நீர் மட்டம் உள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் அதிகபட்ச நீரின் கொள்ளளவு 124.8 அடியாகும். ஆனால் இன்றைய நிலவரப்படி இங்கு 91.8 அடியாக நீர் மட்டம் உள்ளது. இவ்வாறு அனைத்து அணைகளிலும் 70 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை நீர் இருக்கும் நிலையில் டி.கே.சிவக்குமார் தண்ணீரை திறந்துவிட மறுக்கிறார்.
தமிழகம்- கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி பிரச்சினை நீடித்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் கர்நாடகா அரசு மதிக்கவில்லை. அது போல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் காவிரி நீரை முறைப்படுத்தும் குழு கூட்டம் நடந்தது. இதில் காவிரியில் இருந்து தினமும் 3500 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
காவிரியில் தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு நீர் திறந்து விட முடியாது என காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு முறையீடு செய்தது. இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
