காவிரி பிரச்சனை.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு திட்டம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாட்டிற்கு தினமும் 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு பிறப்பித்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையமும் உறுதி செய்துள்ளது.

இந்த உத்தரவு கர்நாடக அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் தலைமையிலான அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கர்நாடகாவில் தீவிர மழை காரணமாக ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விட அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

Cauvery Karnataka

ஆனால் தொடர்ந்து அதிக அளவு நீர் திறக்க முடியாது என்று கூறி இந்த வழக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிரடி உத்தரவு

டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு பிலிகுண்டுலு எல்லைப் பகுதியில் தினமும் 3,500 கனஅடி நீர் வீதம் 15 நாட்களுக்குத் திறந்து விடப்பட வேண்டும் என்ற ஒழுங்குமுறைக்குழுவின் தீர்மானத்தை ஆணையம் ஏற்றுக்கொண்டது.

கர்நாடகா தொடர் வறட்சியை எதிர்கொண்டு வருவதாகக் கூறி இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவை CWMA நிராகரித்தது.

காவிரி பாசனப் பகுதியில் உள்ள கபினி அணை நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், அடுத்த 15 நாட்களில் கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளுக்குக் குறைந்தது 15 டி.எம்.சி நீர் வரத்து கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, 4.5 டி.எம்.சி நீரைத் தமிழகத்திற்குத் திறந்து விடுவதால் கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என CWMA தெளிவுபடுத்தியுள்ளது.

கர்நாடகாவின் வாதம்

CWMA கூட்டத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில், "தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 65.65% குறைவாகப் பெய்துள்ளது. இதன் காரணமாகக் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் 3,500 கனஅடி நீர் வெளியீடு என்பது, பிலிகுண்டுலுவை அடையும் போது ஆற்றின் வறண்ட பாதையால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய 7,000 கனஅடியாகத் திறக்கப்பட வேண்டியிருக்கும்" என அச்சம் தெரிவித்தது.

மேலும், கர்நாடகாவிற்கு தென்மேற்கு பருவமழை மட்டுமே முதன்மையானது என்றும், தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை மூலம் கூடுதல் நீர் கிடைக்கும் என்றும் வாதாடியது. கர்நாடகாவின் முக்கிய குடிநீர் தேவைக்குக் குறைந்தபட்சம் 40 டி.எம்.சி நீர் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாடு

தமிழ்நாடு தரப்பில், பற்றாக்குறை கால நீர் பகிர்வு விதிப்படி தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 9.45 டி.எம்.சி நீரைத் உடனடியாகத் தர வேண்டும். அதற்கு தினமும் 7,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் பாசனப் பயிர்களைக் காப்பாற்ற கூடுதல் தண்ணீர் அவசியம் என்பதைத் தமிழக அரசு உறுதியாகப் பதிவு செய்தது.

கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டம்

CWMA உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, கர்நாடக முதல்வர் தலைமையில் பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் தீவிர மழை காரணமாக ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விட அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஆனால் தொடர்ந்து அதிக அளவு நீர் திறக்க முடியாது என்று கூறி இந்த வழக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, CWMA உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், இரு மாநில எல்லையிலும் பரப்பரப்பான சூழல் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+