Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி டென்ஷன்.. பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்து

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பெங்களூருவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கர்நாடக போலீஸார் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்கள். கடந்த 1991ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு பிறகு காவிரி பிரச்சனை அதிகரிக்கும் போதெல்லாம் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

மழை இல்லாத காலங்களில் காவிரி பிரச்சனை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே தலை தூக்குகிறது. கர்நாடகா இந்தமுறை வறட்சி காலத்திற்கு உரிய தண்ணீரை கூட திறந்துவிட வில்லை என்று தமிழகம் குற்றம்சாட்டியது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.இந்த வழக்கு காரணமாக கொஞ்சம் தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டு வருகிறது.

 Cauvery dispute : Security has been tightened in areas dominated by Tamils in Bangalore

இந்த சூழலில் டெல்லியில் கடந்த 18-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், "அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும்" என கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு போட்டது.

கர்நாடகா தாக்கல் செய்த மனுவில், "கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. இருப்பினும் தமிழகத்தின் வேளாண்மை தேவைகளுக்காக நீர் திறந்துவிட்டிருக்கிறோம்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறக்குமாறு உத்தரவு போட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் இல்லாததால் , குறிப்பிட்ட அளவு திறக்க முடியாது. தற்போது இருக்கும் நீரை கொண்டு கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். எனவே தமிழகத்துக்கு நீர் திறப்பது சாத்தியம் இல்லை. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் " என வலியுறுத்தியது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடாகாவுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. அதோடு, காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இணைந்து காவிரி நீர் தொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவு காரணமாக கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டிய நெருக்கடியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் கடும் வறட்சி இருக்கும் சூழலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டதை எதிர்த்து, கன்னட ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்பினர் நாளை கர்நாடகம் முழுவதும் பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். கர்நாடகா தலைநகர் பெங்களூருவிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது. காவிரி பிரச்சனை பெங்களூருவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதையடுத்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் பி தயானந்த், பெங்களூர் நகரம் முழுவதுமே பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும், அதிக எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கர்நாடகா போலீசார் பெங்களூருவில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போட்டு, தடுப்பு வேலிகளையும் அமைத்துள்ளனர். மேலும் தமிழர்கள் பகுதியில் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளார்கள்.

காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. பெங்களூரில் தமிழர்களை குறிவைத்து மிக மோசமான வன்முறை சம்பவங்கள் நடந்தது, தமிழர்கள் அதிகம் வசிக்கும் மைசூரு பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தமிழ் மக்கள் பீதியடைந்து ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திற்கு ஓடி வந்தனர். இந்தமோதலின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். கர்நாடகாவில் தமிழர்களின் பல்வேறு குடிசை பகுதிகள், வீடுகள் அப்போது தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழர்களின் சொத்துக்களும் சூரையாடப்பட்டன.

எனவே தான், காவிரி பிரச்சனை உச்சகட்டம் ஏற்படும் போது எல்லாம், தமிழகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். அந்த வகையில் நாளை கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் பெரிய அளவிலான பந்த் நடத்த அமைப்புகள் முடிவு செய்துள்ளன. கர்நாடகா முழுவதுமே பந்த் போராட்டங்கள் நடக்க உள்ளன. நாளை பெங்களூருவிலும் பதற்றமான நிலை இருக்கும் என்பதால் தமிழகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே இந்தியா கூட்டணி வலுப்படுத்த தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் காங்கிரஸ் அரசு கூட்டுச் சேர்ந்து செயல்படுவதாக பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+