இனி அணை தாங்காது.. கபினியில் 25,000 கனஅடி நீர் திறந்து விட்ட கர்நாடகா.. தமிழக காவிரியில் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவின் கபினி அணை தனது முழு கொள்ளவை எட்டிவிட்டது. இனி அணையில் தண்ணீரை சேமித்தால் அது அணைக்கு பிரச்சனையாகிவிடும் என்பதால் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேரடியாக தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் தமிழக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

cauvery-flood-warning-25-000-cusecs-water-release-from-kabini-reservoir

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் 2 அணைகள் மூலம் கிடைக்கிறது. ஒன்று கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜசாகர் அணை. இது மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனாவில் அமைந்துள்ளது. அதேபோல் இன்னொரு அணையின் பெயர் கபினி. இந்த அணை மைசூர் மாவட்டம் எச்டி கோட்டையில் அமைந்துள்ளது.

இந்த 2 அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இதில் கபினி அணை தற்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக கேரளா மாநிலம் வயநாடு உள்ளது. வயநாடு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

அதன்படி கபினி அணையின் மொத்த உயரம்(கடல் மட்டத்தில் இருந்து) 2,284 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,282 அடியை தொட்டது. இந்த அணையின் உயரம் 2,284 அடியாக இருந்தாலும் கூட 2,282 அடி வரை மட்டுமே தண்ணீர் சேமிக்கப்படும். அதன்பிறகு தண்ணீர் சேமிக்கப்படாது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படும்.

இன்று காலை 10 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,281.43 அடியை எட்டியது. முழு கொள்ளளவை எட்ட அரையடி மட்டுமே தேவையாக உள்ளது. தற்போது கபினி அணைக்கு வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் வருகிறது. இதில் 25,000 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

இங்கு திறந்து விடப்படும் தண்ணீர் மைசூரு மாவட்டம் சங்கமத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு அங்கிருந்து தமிழகம் வருகிறது. இன்று கபினியில் திறக்கப்பட்ட 25,000 கனஅடி தண்ணீர் நாளை காலையில் தமிழகம் வர வாய்ப்புள்ளது. மேலும் சற்று நேரத்தில் கபினி அணை முழு கொள்ளளவை எட்டிவிடும். அப்படியென்றால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படும்.இதனால் தமிழக காவிரியில் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில், ''கபினி அணையில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது இன்று காலை 10 மணிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீராக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் நாளை காலை ஒகேனக்கல் வந்தடையும். இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+