கருணாநிதி போல் விஜய் செயல்பட வேண்டும்.. காவிரி விவகாரம்! விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மேகதாது அணை திட்டத்தை ஒத்துழைப்பு மனப்பாண்மையோடு அணுக வேண்டும். காவிரி நம்மை பிரிப்பதற்கு பதிலாக இரு மாநில மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

திருவள்ளுவர் சிலை விவகாரத்தை கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் எப்படி முதிர்ச்சியுடன் தீர்த்து வைத்தோர்களோ அதே போன்று மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசும், கர்நாடக அரசும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Karnataka BJP leader writes to TN CM - Vijay should act like Karunanidhi

முதல்வர் விஜய்க்கு கடிதம்

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். விஜயேந்திரா தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மேகதாது அணை திட்டத்தை ஒத்துழைப்பு மனப்பாண்மையோடு அணுக வேண்டும். போதிய மழையின்மையால் கர்நாடகா விவசாயிகள் கவலையில் உள்ளனர். காவிரி நம்மை பிரிப்பதற்கு பதிலாக இரு மாநில மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். தமிழ்நாடும் கர்நாடகாவும் வரலாறு காலாசரம், வணிகம் மற்றும் மக்களிடையே உறவால் இணைக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன.

கருணாநிதி போல

பெங்களூர் நகர வளர்ச்சிக்கு தமிழர்கள் எப்படி முக்கிய பங்களிப்பு செய்து இருக்கிறார்களோ அதேபோல, தமிழ்நாட்டில் வாழகக்கூடிய கன்னடர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்து இருக்கிறார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் திருவள்ளுவர் சிலை விவகாரத்தை எப்படி முதிர்ச்சியுடன் தீர்த்து வைத்தோர்களோ அதன் அடிப்படையில் மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசும், கர்நாடக அரசும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

பெங்களூரில் குடி நீர் தேவையை பூர்த்தி செய்வதோடு தமிழ்நாட்டின் நியாயமான நீர் உரிமைக்கு கர்நாடகா எப்பொழுதும் துணைநிற்கும். பெங்களூர் மற்றும் காவிரி படுகைகளில் உள்ள நகரங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக காவிரி உள்ளது. கர்நாடகாவில் வாழும் கன்னட மக்களும் தமிழர்களும் தங்களின் குடிநீர் தேவைக்காக காவிரி நதி நீரை சார்ந்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் வேதனை

கர்நாடகாவின் நியாயமான நலன்களைப் பாதுகாப்பதோடு, தமிழ்நாட்டின் உரிமைகளையும் மதிக்கும் தலைவருக்கான நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பீர்கள் எனவும், இரு மாநிலங்களுக்கிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேலும் வலுப்படுத்த உதவுவீர்கள் எனவும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். காவிரி நதி நமது மக்களைப் பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைக்கட்டும்" என்று தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ முதவர் விஜய்யின் ஒத்துழைப்பை நாடி, கர்நாடக பாஜக தலைவர் பி ஒய் விஜயேந்திரா கடிதம் எழுதியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை வழங்காமல் கர்நாடகா அடம் பிடித்து வருகிறது. நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாததால் தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுத்து வருகிறது.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இதை ஏற்க மறுத்த கர்நாடகா, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த நில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் கபிணி அணையில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் திறக்கப்பட்டுள்ள நீர் இன்று இரவே தமிழகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+