காலை வாரும் கர்நாடகா.. மேட்டூர் மொத்தமாக காய போகுது! வேடிக்கை பார்க்கப்போகிறாரா விஜய்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்திருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் வழங்க சொன்ன குறைந்தப்பட்ச நீரை கூட வழங்க முடியாது என்று, கர்நாடக இன்று உச்சநீதிமன்றத்தை நாடுகிறது. இதனால் மேட்டூர் நீர்மட்டம் கடுமையாக சரியும் என்று விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் இரண்டும், தமிழகத்திற்கு வினாடிக்கு 6000 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துதான் தற்போது கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை நாடுகிறது.

Cauvery row

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சலுவராயசாமி மற்றும் அம்மாநில சட்டக்குழுவினர் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து, இந்த 6000 கனஅடி நீர் திறப்பு உத்தரவை ஏற்க முடியாதது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தங்களது மாநில அணைகளில் மிக குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளதாகவும், குடிநீர் தேவைகளுக்கே பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறி இந்த உத்தரவை எதிர்த்து இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை கர்நாடகா தாக்கல் செய்கிறது.

அதே நேரத்தில் காவிரி ஒழுங்குமுறை குழுவிடமும், இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய கோரி மறுஆய்வு மனுவையும் தாக்கல் செய்கிறது.

மேட்டூர் அணையை பொறுத்தவரை, அணையின் நீர்மட்டம் 91.15 அடியாக இருக்கிறது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 10,485 கனஅடியிலிருந்து 11,501 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. டெல்டா பாசனத்திற்காக செப்.1ம் தேதி அணை திறக்கப்பட்ட நிலையில், தற்போதைய நீர்வரத்து விவசாயிகளுக்கு சற்று நிம்மதியை கொடுத்திருந்தாலும்.. தொடர்ந்து நீரை திறக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பதால், மேட்டூர் அணையிருந்து திறக்கப்படும் நீர் சீக்கிரமே காலியாகிவிடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

மட்டுமல்லாது குறுவை சாகுபடிக்கு 100-120 நாட்களுக்கு தண்ணீர் தேவை. இப்போதைய அணையின் நீர்மட்டத்தை வைத்து பார்த்தால், 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். கர்நாடகாவிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே குறைந்தது 90-100 நாட்களுக்கு டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் டெல்டாவில் குறுவை சாகுபடி முழுமையாக நடப்பதும், நடக்காமல் இருப்பது கர்நாடகாவின் கையில்தான் இருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் கர்நாடகாவின் மனுவை ஏற்கிறது எனில், தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக சட்ட போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+