பஞ்ச பாட்டு பாடும் கர்நாடாக.. ஆனா உண்மை நிலைமை வேற! தண்ணீருக்காக சண்டை செய்யும் தமிழ்நாடு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக அணைகளில் போதுமான அளவுக்கு நீர் இல்லை என்று பஞ்ச பாட்டு பாடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அம்மாநில அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், கர்நாடகாவின் கபினி அணை அடுத்த ஓரிரு நாட்களில் முழு கொள்ளவை எட்டும் நிலைக்கு சென்றிருக்கிறது.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைகளை கட்டியிருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு தேவையான தண்ணீரை போராடிதான் வாங்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் கர்நாடாக போதுமான அளவில் நீரை கொடுக்கவில்லை.

Cauvery Row

தண்ணீர் திறக்க உத்தரவு

எனவே காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் தமிழ்நாடு தன்னுடைய உரிமை குரலை எழுப்பியது. இதன் விளைவாக 4.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று இரண்டு அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன. இருப்பினும் கர்நாடக அணைகளுக்கு போதுமான நீர் இல்லை என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருந்தார்.

கர்நாடக அணைகளின் நிலவரம்

ஹாரங்கி (95%), கபினி (83%) ஹேமாவதி (67%) மற்றும் கே.ஆர்.எஸ்(36%) என அணைகளில் இவ்வளவுதான் தண்ணீர் இருக்கிறது. இது எங்கள் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்குதான் தாங்கும். அதையும் திறந்துவிட சொல்றீங்களா? என்று சிவகுமார் கேட்டிருந்தார். ஆனால், தற்போதைய நிலவரப்படி கபினி அணை ஓரிரு நாட்களில் முழு கொள்ளவை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கருணை காட்டி மழை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி, ஹேமாவதி அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. கபினி அணையின் முழு கொள்ளவு 19.52 டிஎம்சி. ஹேமாவதி அணையின் கொள்ளவு 37.10 டிஎம்சி. கேரளாவின் வயநாடு, கர்நாடாகவின் கூர்க் பகுதிகளில் கனமழை பெய்யும்போது இந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி வயநாடு பகுதியில் மழை வெளுத்து வாங்குகிறது. எனவே அணையின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வருகிறது.

அணையை திறக்க வேண்டும்

இதன் காரணமாக விரைவில் அணையை திறக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கபினி நீர், கர்நாடாகவின் டி.நரசிபுரா பகுதியில் காவிரியுடன் கலக்கிறது. அதன் பின்னர் அங்கிருந்து நேராக பிலிகுண்டு வந்து மேட்டூருக்கு வந்து சேர்கிறது.

இந்த நீரை நம்பி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகள் இருக்கின்றனர். மொத்தமா 12 லட்சம் ஏக்கர் இந்த நீரை நம்பி மட்டுமே இருக்கின்றன. வழக்கமாக ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும். ஆனால், இந்த முறை கர்நாடகா நீரை திறக்காததால் மேட்டூருக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+