அணை நிரம்பியதால் தான் வேறு வழியின்றி தமிழகத்துக்கு தண்ணீர் செல்கிறது – டிகே சிவக்குமார் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா - தமிழ்நாடு இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பாக அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் டிகே சிவக்குமார்''அரசியலுக்கு அப்பாற்பட்டு காவிரி விஷயத்தில் மாநில மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பேசும்போது அணை நிரம்பியதால் தான் தமிழகத்துக்கு கபினியில் இருந்து தண்ணீர் செல்கிறது'' என்று கூறினார்.

cauvery-row-karnataka-all-party-meeting-to-be-held-on-today-in-bengaluru

தமிழகம் - கர்நாடகா இடையே காவிரிநீர் பங்கீடு மற்றும் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதனை கர்நாடகா ஏற்க மறுத்தது.

தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து அணைகள் நிரம்பிய நிலையில் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முதல் 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று பெங்களூரில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா (காங்கிரஸ்), எடியூரப்பா - பசவராஜ் பொம்மை (பாஜக), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த குமாரசாமி, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், காவிரி பாசன பகுதிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதாவது:

''காவிரி பிரச்சனை என்பது யாருக்கும் புதிது அல்ல. இந்த பிரச்சனையை சந்தித்து கொண்டே தான் வந்து இருக்கிறோம். அரசியலை தாண்டி மாநில மக்கள், விவசாயிகளின் நலன் தான் முக்கியம். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து மாநிலத்தின் நலன்களை பாதுகாக்க ஒன்றுபட்டு இருக்கும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. குடிநீருக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்துக்கு முன்பாக நான் மத்திய அமைச்சர்கள் சிஆர் பட்டீல், பிரஹலாத் ஜோஷி, சோமண்ணா, மாஜி முதல்வர் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ெஷட்டர் உள்ளிட்டோரை சந்தித்து கர்நாடகாவின் நிலை பற்றி விளக்கினே். அவர்கள் மத்திய அரசிடம் அதனை கூறினர். அவர்களின் ஆதரவிற்கு நன்றி. நாடாளுமன்றத்தில் அரசியலை தாண்டி மாநில நலனுக்காக ஒன்றாக நிற்பதாக கூறினர்.

தமிழக முதல்வர் விஜய் காவிரி பிரச்சனை பற்றி பேச நினைத்தார். நான் அந்த கூட்டத்தை ஒத்திவைத்துள்ளேன். காவிரி நிலைமை சீரான பிறகு பேசலாம் என்று அவரிடம் தெரிவித்து உள்ளேன். சமீபத்திய மழை பொழிவு நிம்மதியை தந்துள்ளது. அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் என்பதற்கான அறிகுறி உள்ளது. காவிரி நீர் பகிர்வில் அனைத்து பிரச்சனைகளையு் சுமூகமாக பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க வேண்டும்.

குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க போதிய அளவு அணைகளில் நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கபினி அணை முழு கொள்ளவை எட்டிவிட்டது. மேற்கொண்டு நீர் சேமித்து வைக்க முடியாது. இதனால் அப்படியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர்'' என்று கூறினார். இதன்மூலம் வேறு வழியின்றி கபினியில் அணையில் இருந்து காவிரி வழியாக தண்ணீர் தமிழகத்துக்கு செல்வதாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+