Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டோ தான் ஹைலைட்! ஸ்டாலினின் நீர்ப்பாசன அமைச்சரான சித்தராமையா! காவிரி வழக்கால் பாஜக கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி பிரச்சனையில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக சித்தராமையாக பொறுப்பேற்க இருப்பதாக கர்நாடகா பாஜக கிண்டல் செய்துள்ளது. அதோடு கர்நாடகா பாஜக வெளியிட்ட போட்டோ தான் ஹைலைட்டாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் காவிரி நீர் பங்கீடு செய்வதில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகிறது. உச்சநீதமின்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கண்காணிப்பில் தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் போதிய மழை இல்லை என கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை.

Cauvery row: Tamil Nadu CM Stalin appoints Siddaramaiash as a Irregation minister, says Karnataka BJP

அதாவது தமிழகத்திற்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடாமல் உள்ளது. போதிய அளவு மழை இல்லை. இதனால் அணையின் நீர்மட்டும் குறைந்துள்ளது என காரணம் காட்டி தண்ணீர் திறக்காமல் கர்நாடகா அரசு அடம் பிடிக்கிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சார்பில் தினமும் தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கூறிய நிலையில் அதனை கர்நாடகா நிறைவேற்றவில்லை. இதனால் டெல்டாவில் மூன்று லட்சம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள குருவை சாகுபடி முற்றிலுமாக கருகிப் போயுள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் தான் தண்ணீர் திறக்க முடியவில்லை. அதோடு தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் எனும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைக்கோரி கர்நாடகா சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கவாய், பிஎஸ் நரசிம்மா , பிகே மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்தி இருதரப்பு வாதங்களை கேட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கையும் நிராகரித்த நீதிமன்றம் வறட்சி கால அட்டவணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Cauvery row: Tamil Nadu CM Stalin appoints Siddaramaiash as a Irregation minister, says Karnataka BJP

இந்நிலையில் தான் காவிரி விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை அம்மாநில பாஜக கலாய்த்துள்ளது. அதாவது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடகா பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா பதவியேற்பது போன்ற போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. அதோடு அந்த போட்டோவில் முதல்வர் ஸ்டாலின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பின்னணியின் அணை மதகுகளில் இருந்து நீர் வெளியேறுவதும், முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை பதவியேற்பு விழா என இன்றைய தேதியுடன் பெயர் பலகையும் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்த ட்விட்டர் பதிவில் கன்னடத்தில், கர்நாடகா பாஜக சார்பில், ‛‛கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக நியமனம் செய்தாலும் ஆச்சரியப்படுவற்கில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள 35 அமைச்சர்களை விட காவிரியில் இருந்து பிரச்சனையின்றி தண்ணீர் செல்வதற்கான பணியை நீதிமன்றம் மற்றும் நீதி ஆணையங்கள் மூலம் செய்கிறார்.

அதோடு கர்நாடகாவை புறம்தள்ளிவிட்டு ராகுல் காந்தியின் உத்தரவை அப்படியே சித்தராமையா பின்பற்றி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் கொடுத்து ‛இந்தியா' கூட்டணி உடனான திமுகவின் பிணைப்பை அதிகரிக்க செய்கிறார்'' என விமர்சனம் செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+