காவிரி நீர் கர்நாடகாவிற்கு தான்.. மீதமிருந்தால் தமிழகத்துக்கு தருவோம்.. கார்கே மகன் திமிர் பேச்சு
பெங்களூர்: ''காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடகா அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.முதலில் நம் மக்களின் ஆசை நிறைவேற்றப்படும். நம் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் உறுதியாக இருக்கிறோம். அதன்பிறகு தண்ணீர் மீதம் இருந்தால் சட்டப்படி நீர் பகிர்ந்து கொள்ளப்படும்'' என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகா எப்போதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பது இல்லை. . தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதனை கர்நாடகா ஏற்க மறுத்தது.

இதற்கு கர்நாடகா கூறிய காரணம் என்னவென்றால் போதிய அளவு மழை இல்லை என்பது தான். இதனால் கடந்த 29ம் தேதி தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறக்கவில்லை.
கர்நாடகாவில் கபினி அணை தற்போது நிரம்பிவிட்டது. 124 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 95 அடியை கடந்து 100யை நெருங்கி வருகிறது. கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காமல் இருந்து வந்தது.
ஆனால் கபினி அணை தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வேறு வழியின்றி கர்நாடகா தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விட்டுள்ளது. கபினி அணையின் மொத்த உயரம்(கடல் மட்டத்தில் இருந்து) 2,284 அடியாகும். நேறறு இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,281 அடியாக உள்ளது. கபினி அணைக்கு உள்ளே தற்போது வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அங்கிருந்து தமிழகத்துக்கு காவிரியில் 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே திமிராக பேசினார். பிரியங்க் கார்கே கர்நாடகாவில் உள்துறை அமைச்சராக உள்ள நிலையில் நேற்று கூறியுள்ளதாவது: ''காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அரசு தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. முதலில் நம் மக்களின் ஆசை நிறைவேற்றப்படும். நம் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் உறுதியாக இருக்கிறோம். அதன்பிறகு தண்ணீர் மீதம் இருந்தால் சட்டப்படி நீர் பகிர்ந்து கொள்ளப்படும்.
இந்த விவகாரத்தை கையாள அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை முதல்வர் (டிகே சிவக்குமார்) கேட்டுள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 13ம் தேதி மாநிலத்தில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பந்த் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஏனென்றால் பந்த் போராட்டத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. பந்த் போராட்டத்தை கைவிட வேண்டும். அதேபோல் வறட்சி கால நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு வழிக்காட்டுதல் நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். மழைக்காலம் முடிவடைந்த பிறகு இது பின்பற்றப்பட வேண்டும். காவிரி விஷயத்தில் பாஜகவினர் அரசியல் செய்து வருகின்றனர்'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
