முடங்கும் பெங்களூர்! காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் பந்த் அறிவிப்பு.. களமிறங்கும் வாட்டாள் நாகராஜ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பந்த் நடத்த தயாராகி உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி முக்கிய தகவலை தெரிவித்துள்ளாள். இந்த பந்த்துக்கான தேதியை வாட்டாள் நாகராஜ் அறிவிக்க உள்ளார்.

தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சனை வெடித்துள்ளது. தமிழகத்துக்கு நேற்று முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டது.

cauvery-water-dispute-pro-kannada-organization-decideds-to-karnataka-bandh-says-krv-praveen-shetty

அதனை வழங்க கர்நாடகா மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர், மண்டியா, மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் அடுத்தக்கட்டமாக கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் பந்த் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை கர்நாடகா ரக்சண வேதிகே அமைப்பின் பிரவீன் ஷெட்டி உறுதி செய்துள்ளார். இதுபற்றி பிரவீன் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியதாவது:

''இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் இன்னும் கூட கர்நாடகாவிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டிய சூழல் வந்துள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல் மத்திய அரசு செயல்படுகிறது. கர்நாடகாவில் குடிநீருக்கே தண்ணீர் இல்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. இதனை தீவிரமாக கர்நாடகா ரக்‌ஷண வேதிகே அமைப்பு கண்டிக்கிறது.

அதுமட்டுமின்றி அனைத்து சங்கங்களும் ஒன்றாக இணைந்து கர்நாடகாவில் பந்த் நடத்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். விவசாய சங்கத்தினர், தொழிலாளர் சங்கத்தினர், தலித் அமைப்பினர், அனைத்து கட்சிகள் உள்பட பல்வேறு சிறிய, பெரிய சங்கங்கள் இணைந்து கர்நாடகாவில் பந்த் செய்ய வேண்டும்.

பங்காரப்பா எப்படி காவிரி விஷயத்தில் கர்நாடகாவின் உரிமையை (1991ல் கர்நாடக முதலமைச்சராக இருந்த எஸ். பங்காரப்பா, காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து அவசர சட்டம் பிறப்பித்தார்)காப்பாற்ற முயன்றாரோ அதேபோன்ற நடவடிக்கையை தற்போதைய முதல்வர் டிகே சிவக்குமார் எடுக்க வேண்டும்.

எல்லா கன்னட மக்களும் உங்களுடன் (டிகே சிவக்குமார்) நிற்கிறோம். கர்நாடகாவிலேயே தண்ணீர் இல்லாத சூழலில் எந்த காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க கூடாது. இங்கு மழை இல்லை. அணைகளில் தண்ணீர் இல்லை. மழை வந்து அணைகள் நிரம்பினால் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கலாம்.

நாளை பந்த் போராட்டத்துக்கான தேதியை வாட்டாள் நாகராஜ் அறிவிக்க உள்ளார். அதன்பிறகு அனைத்து சங்கங்களையும் அழைத்து மீட்டிங் செய்து பந்த் நடத்தப்படும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+