தண்ணீர் இருந்தால்தான் கொடுக்க முடியும்.. கோர்ட்டுக்கு போக போறோம்! கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமர் அடம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ள நிலையில், எங்களிடம் காவிரி நீர் இருந்தால் தமிழகத்துக்கு வழங்க முடியும் எனவும், இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும், அதனை செயல்படுத்தாமல் மேல் முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் கூறியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cauvery water release We are going to approach the court Says Karnataka CM DK Shivakumar

4,000 கன அடி நீர்

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 4,000 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடகா, மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து கர்நாடகாவின் மண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து அம்மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்துக்கு மேலும் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. எங்களிடம் காவிரி நீர் இருந்தால் தமிழகத்துக்கு வழங்குகிறோம். இங்கு நீர்வரத்து நின்றுவிட்டது. மழையும் நின்றுவிட்டது. இந்த விஷயத்தில் எங்களுக்கு அழுத்தம் அதிகமாக உள்ளது. நீர் இருப்பு குறித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தக்கட்ட முடிவு குறித்து தெரிவிக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.

மேற்குத் தொடர்ச்சி மலை விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. நாங்கள் விவசாயிகளின் நலனுக்காக பணியாற்றுகிறோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கேற்ப நாங்கள் பணியாற்றுகிறோம். உத்தரவாத திட்டங்கள் ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏக்கள் சிலரே கூறியுள்ளனர். அதனால் நாங்கள் உத்தரவாத திட்ட பயனாளிகளின் விவரங்களை மறுஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.

தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

கடந்த சில மாதங்களாகவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாமல் கர்நாடகா போக்கு காட்டி வருகிறது. கர்நாடக அரசின் இந்த செயலை கண்டித்து தமிழக அரசு சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த சூழலில்தான் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு, அதனை செயல்படுத்த மறுத்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் கூறியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+