அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்.. சித்தார்த்தா மரணத்தில் விலகாத புதிர்.. டிரைவரிடம் தீவிர விசாரணை
காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்தில் நிலவி வரும் சில மர்மங்களை கண்டுபிடிப்பதற்காக போலீசார் அவரின் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்தில் நிலவி வரும் சில மர்மங்களை கண்டுபிடிப்பதற்காக போலீசார் அவரின் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியா முழுக்க பல்வேறு கிளைகளை கொண்டு சிசிடி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் நேற்று முதல்நாள் மாலை காணாமல் போனார்.
நேற்று முதல்நாள் மாலை மங்களூர் அருகே இருக்கும் ஜெப்பினா மோகரூ பகுதி வழியாக செல்லும் போது அவர் பாதியில் காரில் இருந்து இறங்கி உள்ளார். அதன்பின் அவரை காணவில்லை.

என்ன மரணம்
மங்களூர் அருகே இருக்கும் ஜெப்பினா மோகரூ பகுதியில் உள்ள உல்லால் பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து நேற்று முழுக்க அவரின் உடல் தேடப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை அவரின் உடல் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் மரணம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன விசாரணை
மீட்கப்பட்ட இவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்துள்ள நிலையில் இன்று மாலை அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பல முக்கிய அரசியல் தலைவர்கள் அவரின் இறுதிசடங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன சந்தேகம்
இந்த நிலையில் சித்தார்த்தா மரணத்தில் நிலவி வரும் சில மர்மங்களை கண்டுபிடிப்பதற்காக போலீசார் அவரின் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தார்த்தா மாயம் ஆன சமயத்தில் அவரின் காரை ஓட்டி சென்ற டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். சித்தார்த்தா பாலத்தில் இருந்து குதித்த நேரத்தில் டிரைவர் என்ன செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படி தெரியாது
சித்தார்த்தா தண்ணீரில் விழுந்தது உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது, நீங்கள் அப்போது எங்கே சென்றீர்கள். உண்மையில் அவர் காரை நிறுத்த சொன்னது எதற்காக, அவர் போனில் என்ன பேசிக்கொண்டு இருந்தார் என்று போலீசார் அவரின் டிரைவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications