அது தோல்வி அல்ல, வெற்றி படிக்கட்டுகள்.. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனை டிரெண்ட் செய்யும் நெட்டிசன்ஸ்
பெங்களூர்: "தோல்விகள் வெற்றிக்கான படிக்கட்டுகள்" என்ற கருத்துக்களுடன், 'இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 திட்டம் கடைசி கட்டத்தில் பின்னடவை சந்தித்த போது கண்கலங்கிய படத்தை பகிர்ந்து', தற்போது நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பூமியின் துணைக் கோளான நிலவில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வம் மனித குலத்திற்கே உள்ளது. நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் இஸ்ரோவும் கம்பீரமாக இந்த நாடுகளின் வரிசையில் உள்ளது. இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியிருந்த இஸ்ரோ, நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

தனது சாதனை பயணத்தின் மற்றொரு பயணமாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இது கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து நிலவில் கால் பதித்துள்ளது. ஒட்டு மொத்த தேசமும் இஸ்ரோவின் இந்த சாதனையை கொண்டாடி வருகிறது. நிலவின் தென் துருவத்தில் எந்த ஒரு நாடும் இதுவரை ஆய்வு மேற்கொண்டது இல்லை என்ற நிலை இருந்ததை இஸ்ரோ மாற்றி அமைத்துள்ளது.
இஸ்ரோ நிகழ்த்திய இந்த சாதனைதான் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் இருந்தது. அதேவேளையில், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன் புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் செய்ய இருந்தது. நள்ளிரவு நடைபெற்ற இந்த நிகழ்வை மொத்த தேசமே விழித்து இருந்தது பார்த்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியாவின் விண்கலம் நிலவில் கால் பதிப்பதை பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடியும் நேரடியாக பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கே சென்று பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் நிலவின் தென் துருவத்தில் விணகலனை இறக்க முடியாமல் போனது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகளும் சற்றும் அதிர்ச்சி அடைந்தனர்.
Failures are stepping stone towards success
— Ragini 🇮🇳 (@Ragini_Singhdeo) August 23, 2023
Let's remember the contribution of Sivan sir on this momentous occasion#Chandrayaan3Landing #Chandrayaan3 #Chandrayaan_3 pic.twitter.com/ryuQx2rmma
அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த கே.சிவன், மனம் உடைந்து அழுதுவிட்டார். அவருக்கு பிரதமர் மோடி, ஆறுதல் கூறினார். இந்த புகைப்படத்தை வைத்துதான் தற்போது நெட்டிசன்கள், பலரும் "தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுகள் மட்டுமே" என்ற கருத்துக்களுடன் பதிவிட்டு வருகின்றனர். இஸ்ரோ தற்போது நிகழ்த்திய சாதனை நாளில், கே.சிவனின் பங்களிப்பையும் நினைவு கூர்வோம் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
Universal learning: Every failure is a stepping stone to achieve bigger and better success. #ISRO #Chandrayaan3 pic.twitter.com/Ik6343iMC1
— Keh Ke Peheno (@coolfunnytshirt) August 23, 2023
அதே போல் மற்றொரு நெட்டிசன் பதிவிட்டு இருக்கும் ட்விட்டில், தோல்வியில் இருந்து எப்படி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த நாள் சிறந்த உதாரணம் எனப் பதிவிட்டு இருக்கிறார். இத்தகைய பதிவுகளால் 2019-ல் இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் குறித்த பதிவுகளும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.












Click it and Unblock the Notifications