வேற லெவல்! விண்வெளியில் மட்டும் இல்லை யூடியூப்பிலும் ரெக்கார்ட் வைத்த சந்திரயான் 3..எப்படி தெரியுமா?
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் நேரலை செய்யப்பட்டது. இதில் யூடியூப்பில் மட்டும் 80 லட்சம் பேர் லைவ்-வில் பார்த்துள்ளனர். இது புதிய சாதனையாக மாறியுள்ளது.
நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில்,,இந்தியாவின் இஸ்ரோவும் உலகமே திரும்பி பார்க்கும் வகையிலான சாதனைகளை விண்வெளி ஆராய்ச்சியில் செய்து வருகிறது. சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இஸ்ரோ, நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது.

அதன்பிறகு சந்திரயான் 2 திட்டம் பகுதியளவு மட்டும் வெற்றி கிடைத்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவில் தரையிறங்கும் நேரத்தில் சந்திரயான் 2 விண்கலம் திட்டம் சறுக்கலை சந்தித்தது. ஆனாலும் இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்ற இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் 40 நாட்கள் பயணத்தை நிறைவு செய்து இன்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் முறையில் இறங்கியது.
உலகின் எந்த ஒரு நாடும் செய்யாத சரித்திர சாதனையை இந்தியாவின் இஸ்ரோ இதன் மூலம் நிகழ்த்தியிருக்கிறது. இந்தியாவின் இந்த சாதனையை உலக வல்லரசு நாடுகளே திரும்பி பார்த்துள்ளன. ஏனெனில் இதுவரை எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் இதுவரை ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியிருக்கிறது.
நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் மற்றும் விக்ரம் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளும். நிலவின் மின்னூட்டம், நிலநடுக்கம், அங்குள்ள சூழல் உள்ளிட்டவை பற்றி எல்லாம் ஆய்வை மேற்கொள்ள உள்ளது. இஸ்ரோ நிகழ்த்திய இந்த சாதனையை ஒட்டு மொத்த தேசமே கொண்டாடியது. விண்வெளித்துறையில் முத்திரை பதித்து இருக்கும் இஸ்ரோ, சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை இன்று மாலை 5.27 மணியளவில் இருந்து நேரலையாக ஒளிபரப்பியது.

இஸ்ரோவின் இணையதளம் மற்றும் யூடியூப் பக்கம், பேஸ்புக்கிலும் நேரலை செய்யப்பட்டது. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இஸ்ரோ நிகழ்த்திய சாதனையை நேரலையில் கண்டு மகிழ்ந்தார்கள். நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ சாதனை நிகழ்த்தியிருக்கிறது என்றால், சமூக வலைத்தள பக்கத்திலும் இஸ்ரோ சாதனை வைத்துள்ளது.
அதாவது யூடியூப் பக்கத்தில் லை டெலிகாஸ்ட்டை 8.06 மில்லியன் பார்த்துள்ளதாக The world Ranking தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கூறியுள்ளது. இதுதான் இதுவரையில் அதிக வியூஸ்களை பெற்ற லைவ் ஸ்டிரீம் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் பிரேசிலுக்கும் தென் கொரியாவுக்கும் இடையெ நடைபெற்ற கால்பந்து ஆட்டம் இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியை யுடியூப் லைவில் 6.15 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். தி வேர்ல்டு ரேங்கிங் தரவுகளின் படி இஸ்ரோ நிலவில் மட்டும் இன்றி யூடியூப்பில் இன்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications