கோலி ரிட்டர்ன்ஸ்.. ஐபிஎல்-க்கு தயாராகும் சின்னசாமி மைதானம்.. ஈசாலாவும் ஆர்சிபியா
பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், அவர்களின் ஹோம் கிரவுண்டான சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது கேள்வி குறியாகியுள்ளது. அந்த அணியின் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அங்கு போட்டிகள் நடப்பதில்லை. இந்நிலையில் அங்கு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடத்த கர்நாடகா அரசு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகள் அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விராட் கோலி சின்னசாமி மைதானத்தில் ரிட்டர்ன் கொடுக்கவுள்ளார்.
2026 ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. கேகேஆர், சிஎஸ்கே அணிகள் அதிக தொகையுடன் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளன. ஒவ்வொரு அணியின் 2026 சாம்பியின் கோப்பையை வெல்வதற்காக இந்த மினி ஏலத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன. மற்ற அணிகள் எல்லாம் 16 ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

சின்னசாமி மைதானம்
ஆனால் பெங்களூர் ரசிகர்கள் இப்போதே மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். ஆர்சிபி நடப்பு சாம்பியனாக உள்ளது. 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக 2025 சீஸனில் தான் பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி பேரணியை நடத்தியது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டன. சின்னசாமி மைதானத்திற்கு பதிலாக கர்நாடகாவில் வேறு மைதானம் உருவாக்கும் பணி நடைபெறுகிறது என்று தகவல் வெளியானது. இதனால் 2026 ஐபிஎல் சீஸினில் ஆர்சிபி போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெறாது என்று கூறப்பட்டது.
தடையின்மை சான்று
கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சமீபத்தில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். நான் தீவிர கிரிக்கெட் ரசிகன். பெங்களூர் நற்பெயரை பாதுகாப்பதற்காக சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும். என்று கூறியிருந்தார். இந்நிலையில் சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக கர்நாடகா அரசு, கர்நாடகா மாநில கிரிக்கெட் வாரிய தலைவர் வெங்கடேஷ் பிரசாத்துக்கு தடையின்மை சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் சின்னசாமி மைதானத்தில் விரைவில் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விஜய் ஹசாரே கோப்பை போட்டி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
கோலி, ஆர்சிபி ரிட்டர்ன்ஸ்
கர்நாடகா - டெல்லி போட்டிகள் ஆளுர் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது அந்த போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் மாற்றுவதற்கு ஆலோசனை நடந்து வருகிறது. டெல்லி அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். அவர்கள் விஜய் ஹசாரே போட்டியில் முழுவதுமாக பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தன் ஆஸ்தான சின்னசாமி மைதானத்திற்கு திரும்பவுள்ளார்.
சின்னசாமி மைதானத்தில் உள்ளூர் போட்டிகளுக்கு குறைந்தளவு ரசிகர்களை மட்டும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே போட்டிகளை நடத்தி, அதில் உள்ள அனுபவங்களை பொறுத்து அங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே போட்டிகள் வெற்றிகரமாக நடத்துப்பட்டுவிட்டாலே, 2026 ஐபிஎல் போட்டி அங்கு நடைபெறுவது உறுதியாகிவிடும். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் இப்போதே உற்சாகமாகிவிட்டனர்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications