ஹனுமனை விடாத பசவராஜ் பொம்மை.. வாக்கு எண்ணிக்கை பரபரக்க.. கோவில்களுக்கு படையெடுத்த தலைவர்கள்!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஹனுமன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். மஜத தலைவர் எச்.டி.குமாரசாமியும் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே 10-ஆம் தேதி தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று ஹூப்ளியில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். ஹனுமனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக வணங்கியபடி பொம்மை, பூஜை செய்யும் காணொளி வெளியாகியுள்ளது.

ஹனுமனிடம் பிரார்த்தனை செய்த பின்னர், பாஜக வெற்றி பெறும் என நம்பிக்கையோடு தெரிவித்த பசவராஜ் பொம்மை, "கர்நாடகா மக்களின் தீர்ப்பு வரப்போகிறது. பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை வழங்கும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.குமாரசாமி இன்று எச்எஸ்ஆர் லேஅவுட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பசவேஸ்வர உமாமகேஸ்வரி கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் பிரார்த்தனை மற்றும் பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், தொங்கு சட்டசபை ஏற்பட்டால் அரசாங்கத்தை அமைப்பதற்காக தன்னை இன்னும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
இந்நிலையில், சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் காங்கிரஸ் முன்னணி தலைவர் பிரியங்கா காந்தி வழிபாடு செய்துள்ளார். கர்நாடகாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் சூழலில் சிம்லாவில் அனுமன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக பஜ்ரங்தள அமைப்பை தடை செய்வதாக அறிவித்தது. அனுமனின் பக்தர்களாக இருப்பவர்கள் இந்த அமைப்பில் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பை காங்கிரஸ் செய்தது. இதற்கு பாஜக, பஜ்ரங்தளம் உள்பட பிற இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பிரதமர் நரேந்திர மோடி தனது மேடை பேச்சுகளில் ‛பஜ்ரங்பலி' என்ற கோஷத்தை முன்வைத்தார். அதோடு பாஜக தலைவர்கள் அனைவரும் கோவிலில் அனுமன் சாலிசா பாடல்களை பாடினர். முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே உள்பட பல முக்கிய தலைவர்கள் அனுமன் சாலிசா பாடல்களை பாடினர்.
காங்கிரஸ் கட்சி இந்து கடவுள்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது என்றும் இதனால் இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை பாஜக வலியுறுத்தியது. பாஜகவின் இத்தகைய மதம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பல தேர்தல்களில் கைக்கொடுத்துள்ளது. அதன்படி இப்போதும் கர்நாடகாவில் பாஜக அதனை முன்னெடுத்தது.
ஆனால், தற்போது வெளியாகி வரும் கர்நாடகா தேர்தல் முடிவுகளில் பாஜக பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அதேசமயம், மத ரீதியாக பாஜகவுக்கு கைகொடுக்கும் எனக் கருதப்பட்ட கடலோர கர்நாடகா பகுதியில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications