எஸ்ஐஆர் ரத்து செய்யனும்.. பெங்களூரில் சிஜேபி போரட்டம்.. கைகோர்த்த துருவ் ராதே, பிரகாஷ் ராஜ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி இன்று பெங்களூரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செருப்பு போராட்டம் நடந்தது. பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் இன்று நடந்த போராட்டத்துக்கு பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி போராட்டத்திலும் பங்கேற்றார். அப்போது அவர் எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.

யூடியூபரும் அரசியல் ஆய்வாளருமான துருவ் ரத்தே இடது சாரி தலைவர்கள் நேஹா போரா மற்றும் ஆஷ் கோஷ் ஆகியோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் பலவேறு குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வந்தன. எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக சக தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்ததாக வெளியான தகவல் இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

Cockroach Janata Party to Stage Slipper Protest Against Gyanesh Kumar in Bangalore Today

சிஜேபி போராட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மாணவ அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்த ஆரம்பித்த கரப்பான் பூச்சி ஜனதா போராட்ட களத்தில் குதித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் போராடி வருகிறது.

யூடியூபர் நேஹா போரா பங்கேற்பு

கடந்த 2 ஆம் தேதி மும்பையில் போராட்டம் நடத்திய நிலையில், இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் செருப்பு போராட்டம் நடத்தினர். ஏற்கனவே சிஜேபி-யின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆஷ்தோஷ் செருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார்.

இந்த போராட்டத்துக்கு பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்ஜும் ஆதரவு தெரிவித்தார். மேலும் அவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார். இதே போன்று இந்த போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அதேபோல, யூடியூபரும் அரசியல் ஆய்வாளருமான துருவ் ரத்தே இடது சாரி தலைவர்கள் நேஹா போரா மற்றும் ஆஷ் கோஷ் ஆகியோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

எஸ்.ஐ.ஆரை ரத்து செய்யனும் - பிரகாஷ் ராஜ்

போராட்டத்தில் பங்கேற்ற பிரகாஷ் ராஜ், “ஏழைகள், சிறுபான்மையினரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. ஞானேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது:- "வாக்காளர் தீவிர திருத்த பட்டியலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக இந்த போராட்டத்தில் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+