ஒரே அடியா ஏறுது விலை.. காஃபி லவ்வர்களுக்கு பேட் நியூஸ்!
பெங்களூர்: காலை எழுந்தால் புத்துணர்ச்சிக்கு தொடங்கி, ஸ்ட்ரெஸ், ரிலாக்ஸ் என்று பலவற்றுக்கும் காபியை விரும்பும் ஏராளமான காபி லவ்வர்ஸ் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காபியின் விலை உயர உள்ளதாக இந்திய காபி வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய காபி வணிகர் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அதில், ஒரு கிலோ காபி தூள் விலையை ரூ.100 உயர்த்த உள்ளோம். சூழ்நிலை காரணமாக எங்களுக்கு விலை ஏற்றுவது தவிர வேறு வழியில்லை. அதனால் தான் விலை ஏற்றுகிறோம்.

அரபிகா, ரொபஸ்டா காபியின் விலை உயர்ந்துவிட்டது. உலகளவில் காபிக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் பல்வேறு காரணங்களால் காபி உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் காபி அனைவராலும் மிகவும் விரும்பப்டுகிறது. அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்தாண்டு ஒரு கிலோ காபி கொட்டையின் விலை ரூ.200-280 வரை உயர்ந்துள்ளது.
இந்தியா 3.5 லட்சம் டன் காபி உற்பத்தி செய்கிறது. இவற்றில் 70 சதவீதம் ரொபஸ்டா. இவற்றில் ஒரு லட்சம் டன் காபி உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதலே காபியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்தாண்டு ரொபஸ்டா காபியின் விலை ஒரு கிலோ ரூ.200 ஆக இருந்தது. தற்போது ஒரு கிலோ ரொபஸ்டா காபியின் விலை ரூ.420 ஆக அதிகரித்துள்ளது. அரபிகா காபியின் விலை ஒரு கிலோ ரூ.290 ஆக இருந்தது. தற்போது ஒரு கிலோ அரபிகா காபியின் விலை ரூ. 465 ஆக அதிகரித்துள்ளது.
காலநிலை மாற்றம் பிரச்னையால் காபியின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. காபிக்கான சர்வதேச சந்தையில் விலை உயரும்போது, உள்நாட்டிலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும். க்ரீன் டீ போல, க்ரீன் காபியும் வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் க்ரீன் காபியின் உற்பத்தி 40-50 சதவீதம் உயர்ந்துள்ளது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விலை உயர்த்தும்போது, அந்தப் பொருளுக்கான உற்பத்தியும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். என்றனர்
விலை உயர்வு குறித்து சமூக ஆர்வலர்கள், தேவை அதிகரித்து வருவதால், கலப்படம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே சிக்கரி கலவையை கண்காணிக்க வேண்டும். உணவு தர நிர்ணயம் விதிகள் படி, காபியில் 49 சதவீதம் வரை சிக்கரி கலக்க வேண்டும். ஆனால் வணிகர்களும், தரகர்களும் காபியில் 20 சதவீதம் சிக்கரி கூட கலப்பதில்லை.
இதனால் காபியின் சுவை குறைகிறது. காபி தூள் விலை அதிகரிப்பதால், அதில் சிக்கரி கலப்பதும் அதிகரிக்கும். அதனால் இந்த செயல்முறைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். என்று கூறியுள்ளனர்.
கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட 300 காபி ரோஸ்டர்ஸ் உள்ளனர். தென்னிந்தியாவில் 500 காபி ரோஸ்டர்களும் இருக்கின்றனர். பதிவு செய்யப்பட்ட 3,000 காபி கூடங்கள் உள்ளன. இந்நிலையில் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தான், தரமில்லாத காபியை விற்பதாக அவர்களுக்கு காபி வணிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வால் வருகிற அக்டோபர் 15ம் தேதி முதல் ஹோட்டல், கபே ஆகிய இடங்களில் காபி விலை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications