பாத்ரூமில் குளிக்கபோன பெண்.. வெண்டிலேட்டர் வழியாக வீடியோ எடுத்த மாணவர்! காட்டிக்கொடுத்த போன்கால்
பெங்களூர்: பெங்களூரில் வசித்து வரும் 30 வயது பெண் தனது வீட்டு பாத்ரூமில் இரவில் குளிக்க சென்றார். அப்போது வெண்டிலேட்டர் ஜன்னல் வழியாக கல்லூரி மாணவர் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் திடீரென்று வந்த போன்காலால் சிக்கினார்.
சென்னை, பெங்களூர் உள்பட பல முக்கிய நகரங்களில் நெருக்கமாக வீடுகள் உள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் பெண்களை வீடியோ எடுத்து தர்மஅடி வாங்குவதையும், கைது செய்யப்படுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

ஆனாலும் கூட இன்னும் ஒரு சிலர் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூரில் இப்படியொரு சம்பவம் நடந்து அதிர வைத்துள்ளது.
பெங்களூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் 30 வயது பெண். திருமணம் ஆனவர். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இரவு தினமும் இரவில் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வர 11 மணி ஆகிவிடும். கடந்த 12ம் தேதி இரவும் வீட்டுக்கு வந்த அந்த பெண் குளிக்க சென்றார். வீட்டில் உள்ள கீசரில் இருந்து வெந்நீரை அவர் திறக்க முயன்றார்.
அப்போது திடீரென்று அவரது செல்போன் ஒலித்தது. இதனால் அந்த பெண் தண்ணீர் நிரம்புவதற்குள் வந்து விடலாம் என்று செல்போனை எடுக்க வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு செல்போனில் பேசிவிட்டு அவர் குளிக்க வந்தார். பாத்ரூமுக்குள் நுழைந்தபோது வெண்டிலேட்டர் ஜன்னலில் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் கத்தினார். உடனடியாக பாத்ரூமில் இருந்து வெளியே ஓடிவந்த பெண் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். அவர்களுக்கு வீட்டின் அருகே வசிக்கும் 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக செல்போனை பிடுங்கி பார்த்தனர். அப்போது அந்த பெண்ணை வீடியோ எடுத்தது உறுதியானது.
இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவனை கைது செய்தனர். இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த அந்த மாணவனின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று தங்களின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
மேலும் மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறி அதற்கான ஆவணங்களை காண்பித்தனர். இதையடுத்து போலீசார் வீடியோவை டெலிட் செய்தனர். செல்போனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிய போலீசார் மாணவனின் மனநலத்தை கருத்தில் கொண்டு ஸ்டேஷன் பெயிலில் அனுப்பினர்.












Click it and Unblock the Notifications