‛ஸ்கெட்ச்’.. முதல்வர் பசவராஜ் பொம்மையை எதிர்ப்பது யார் தெரியுமா?காங்கிரஸின் புது வேட்பாளர் பட்டியல்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான 5வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பசவராஜ் பொம்மையை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி கர்நாடகா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தான் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பெங்களூர் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக ஏசி சீனிவாசா அறிவிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் கேஆர் புரா தொகுதி வேட்பாளராக டிகே மோகன் போட்டியிடுகிறார். மேலும் கோலார் மாவட்டம் முல்பாகல் தொகுதி வேட்பாளராக முத்துகங்காதரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.
அதோடு ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியில் காங்கிரசில் யாசீர் அகமது கான் பதான் போட்டியிடுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது உள்ளது. இந்த சிக்கான் தொகுதி தான் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதியாகும். இந்த தொகுதியில் பசவராஜ் பொம்மை 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 4வது முறையாக களமிறங்கி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் சார்பில் பசவராஜ் பொம்மையை எதிர்த்து முஸ்லிம் வேட்பாளராக யாசீர் அகமது கான் பதான் என்பவரை காங்கிரஸ் கட்சி களமிறக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications