Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறங்கி அடிக்கும் காங்கிரஸ்.! கர்நாடகாவில் தலைகீழ் மாற்றம்! ஜேடிஎஸ்- பாஜக திடீர் கூட்டணி! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸின் வளர்ச்சியைச் சமாளிக்க இப்போது பாஜகவுடன் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்துள்ளது. இருப்பினும், இது எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பார்க்கலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் நேரடியாக மோதியதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. இரு கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் நேரடியாக வந்து பிரசாரம் செய்தனர்.

 Congress Huge surge in Karnataka Old Mysore region Will BJP-JDS alliance help to counter

பலரும் முதலில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு அதிகம் என்றார்கள். இருப்பினும், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இமாலய வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 135இல் வென்றது. பாஜக மற்றும் ஜேடிஎஸ் முறையே 66 மற்றும் 19 இடங்களில் மட்டுமே வென்றன.

கூட்டணி: இதனிடையே அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சமாளிக்கும் வகையில் கர்நாடகாவில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கூட்டணியை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில் ஓல்ட் மைசூர் பகுதியில் தான் ஜேடிஎஸ் வலுவாக இருக்கும் பகுதியாகும். அங்கே இந்த முறை தேர்தல் முடிவுகள் ஜேடிஎஸ் தலைமைக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. அங்கு ஜேடிஎஸ் கட்சிக்கு வெறும் 14 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதேநேரம் அங்குக் காங்கிரஸ் கட்சி அப்படியே 37 இடங்களை அள்ளியது.

தங்கள் கோட்டை என்று நினைத்திருந்த ஒல்ட் மைசூரிலேயே காங்கிரஸ் செல்வாக்கு அதிகரித்தால் தான், தனித்து போட்டி என்ற முடிவைச் சற்று ஓரமாக வைத்துவிட்டு பாஜகவுடன் ஜேடிஎஸ் கூட்டணி அமைந்துள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ் அடைந்த அசுர வளர்ச்சியை எதிர்கொள்ள ஒரு சக்திவாய்ந்த தேர்தல் கூட்டணியாக இது இருக்கலாம் என்ற போதிலும் இது எந்தளவுக்குப் பலன் தரும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

பலன் தருமா: இரு தரப்பு வாக்காளர்களையும் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற புள்ளியில் இணைக்க முடியுமா என்பதே இப்போது கேள்வி. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மெகா வெற்றியைப் பதிவு செய்த காங்கிரஸ், உடனடியாக பிரசாரத்தின் போது முன்வைத்து வாக்குறுதிகளைச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது. அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு இது நிச்சயம் கை கொடுக்கும் என்று அங்குள்ள அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்த நிலையில் தான், பாஜக- ஜேடிஎஸ் கூட்டணி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

கர்நாடக தேர்தலுக்கு முன்பு, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருந்த போதிலும், ஓல்ட் மைசூர் பகுதியில் ஜேடிஎஸ் இந்தளவுக்கு ஒரு மோசமான தோல்வியை அடையும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த நேரத்தில் அவர்கள் தேசியக் கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்துள்ளது என்பது அவர்கள் மீண்டு வர உதவும். பாஜக உடனான கூட்டணி ஓல்ட் மைசூர் பகுதியில் ஜேடிஎஸ் பலத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

எது முக்கியம்: இந்தக் கூட்டணி என்பது இரு தரப்பிற்கும் நல்ல பலனைக் கொடுக்க வாய்ப்பு உள்ளது என்ற போதிலும், இது காங்கிரஸை வீழ்த்த உதவுமா என்பது சீட் பகிர்வுக்குப் பின்னரே தெளிவாகத் தெரிய வரும். கர்நாடகாவில் தேர்தலுக்கு இரு கட்சிகளும் எப்படி தயாராகிறார்கள், எத்தனை இடங்களில் போட்டியிட உள்ளனர் என்பது தேர்தலில் முடிவுகளில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த தேர்தலில் ஓல்ட் மைசூர் பகுதியில் இறங்கி அடித்த காங்கிரஸ், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி அதன் மூலம் மீண்டும் இந்த பகுதியில் தனது பிடியை உறுதிப்படுத்த விரும்புகிறது. இது மட்டுமின்றி மோடி அரசுக்கு எதிராக இருக்கும் மனநிலையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்கிறது. மொத்தத்தில் இந்த கூட்டணி என்பது கர்நாடகாவில் தேர்தல் அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+