Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கி நெருங்கி.. கவனிச்சீங்களா? கமல்ஹாசனை ‘இன்வைட்’ செய்த காங்கிரஸ்! 2024 கூட்டணி கன்ஃபார்ம் போல!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : நாளை மறுநாள் நடைபெறவுள்ள கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மநீம தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் முடிவு எடுக்க முடியாமல் கடந்த 5 நாட்களாக காங்கிரஸ் தலைமை திணறி வந்த நிலையில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

Congress invites kamalhaasan for karnataka cm swearing in ceremony

இந்த நிலையில் நாளை மறுநாள் பெங்களூரில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நாளை பெங்களூர் செல்கிறார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெருபான்மையுடன் வெற்றி பெற்றதற்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள் ராகுல். காந்தியைப்போல நீங்கள் உங்கள் வழியில் பயணித்து மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள்.

அவரைப்போலவே மென்மையான வழியில் அன்பு, பணிவுடன் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள். உங்களின் நம்பகத்தன்மை வாய்ந்த அணுகுமுறையால் மக்களால் புதிய காற்றை சுவாசிக்க முடிந்துள்ளது. பிரிவினையை நிராகரிப்பார்கள் கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள்" எனப் பதிவிட்டார்.

முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். அண்மைக்காலமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார்.

Congress invites kamalhaasan for karnataka cm swearing in ceremony

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்று, டெல்லியில் உரையாற்றினார் கமல்ஹாசன். அதோடு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வந்ததன் மூலம், மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பதவியேற்பு விழாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்று கமல்ஹாசன் பெங்களூர் செல்வார் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் - கமல்ஹாசன் நெருக்கம் அதை உறுதி செய்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+