தொங்கு சட்டசபை எல்லாம் நோ சான்ஸ்! கர்நாடகாவில் அடித்து நொறுக்கிய காங்கிரஸ்.. கணிப்புகள் பொய்யானது
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. முதற்கட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் கூறப்பட்ட நிலையில், அதை முறியடித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழலே இப்போது உருவாகியுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவே நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து இன்று அங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கே ஒரு கட்சி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இது தவிர பல இடங்களில் ஜேடிஎஸ் கட்சியும் அங்கே பல தொகுதிகளில் கடும் போட்டி தருகிறது. இதனால் சில தொகுதிகளில் அங்கே மும்முனை போட்டி நிலவுகிறது.
முதற்கட்ட முடிவுகளைப் பார்த்துப் பார்க்கும் போது, காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயல்கிறது. இதன் காரணமாகவே இறுதிக் கட்டத்தில் பிரதமர் மோடியே பல முறை கர்நாடகாவுக்கு நேரடியாக வந்து பிரசாரம் செய்தார்.
மறுபுறம் பாஜக அரசு மக்கள் மீது அதிருப்தி உள்ளனர் என்றும் 40% கமிஷன், மதவாதம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்பிக்கையில் இருந்தது.
கருத்துக்கணிப்புகளிலும் கூட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தாலும், எக்ஸிட் போல் முடிவுகள் கடும் போட்டி இருக்கும் என்றே கூறியிருந்தது. இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளிலும் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருப்பதே தெரிகிறது. கடைசிக் கட்டத்தில் பாஜக தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இதன் மூலம் அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டது. ஏனென்றால் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை என்பது ஒன்றும் புதிய விஷயம் இல்லை கடந்த காலங்களிலும் அடிக்கடி அங்கே தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்தில் 1999, 2004, 2008, 2013 மற்றும் 2018 என மொத்தம் ஐந்து முறை தேர்தல்கள் நடந்துள்ளன. அதில் 1999 மற்றும் 2013 என இரு தேர்தல்கள் மட்டுமே ஒரு கட்சிக்குத் தெளிவாகப் பெரும்பான்மை கிடைத்திருந்தது. மற்ற நேரங்களில் தொங்கு இருந்து, மற்ற கட்சிகள் அல்லது சுயேச்சை உடனேயே அரசு அமைந்தன.
இந்தத் தேர்தலிலும் முதற்கட்ட தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் இருப்பதே தெரிந்தது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை சில மணி நேரம் செல்ல காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை பெறுவது உறுதியாகியுள்ளது. அங்கே பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், இப்போது காங்கிரஸ் சுமார் 130 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
இதன் மூலம் காங்கிரஸ் யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications