எக்ஸிட் போல் முடிவு: குமாரசாமி பதவிக்கு ஆபத்து.. கர்நாடக கூட்டணி ஆட்சிதான் முதல் காவு?
Recommended Video
பெங்களூரு: எக்ஸிட் போல் முடிவுகள் வெளியானதில் இருந்து கர்நாடக கூட்டணி ஆட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகவே வந்துள்ளது. இதனால் பாஜக அல்லாத கட்சியை மத்தியில் அமர்த்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பிறகு சில கட்சிகளின் நிலையிலும் சில கட்சியின் நிர்வாகிகள் நிலையிலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸிட் போலை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆதரவு
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம் மிகக் குறைந்த இடங்களையே கைப்பற்றியது. ஆனால் அதைவிடவும் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில் மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு ஆதரவு கொடுத்து குமாரசாமியை முதல்வராக்கியது.

மீண்டும் சித்தராமையா
இந்நிலையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் சித்தராமையாவே மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு குமாரசாமி இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.

வலுவான விரிசல்
இந்த கருத்துவேறுபாடு மக்களவை தொகுதி பங்கீட்டிலும் எதிரொலித்தது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையேயான விரிசல் வலுவானது.

கூட்டணி உடையும்
போதாகுறைக்கு எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வந்துள்ளது. தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக வந்தால் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி உடையும் என கூறப்படுகிறது.

யார் முதல்வர்?
கூட்டணி உடைந்தால் ம.ஜனதாதளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை தொடருமா அல்லது புதிதாக தேர்தலை எதிர்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேலை மஜத பாஜகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் பதவி யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மீண்டும் தேர்தல்
ஏனெனில் பாஜக 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை கையில் வைத்துள்ளது. ஆகையால் ஆட்சிக் கூட்டணியில் இருந்தால் மட்டும் போதும் அல்லது மீண்டும் தேர்தலையே எதிர்கொள்கிறோம் என்ற முடிவுக்கு மஜத வருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சித்தராமையாவுக்கும் எதிர்ப்பு
அதேநேரத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் சித்தராமையா கர்நாடகாவின் அடுத்த முதல்வராவாரா என்பதும் சந்தேகம்தான். எது எப்படியோ தற்போதைய சூழ்நிலையில் குமாரசாமியின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பது மஜத தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications