கர்நாடகாவில் ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல்?.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடகாவில் சொகுசு ஹோட்டலில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் சொகுசு ஹோட்டலில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே சண்டை நடப்பதாக தகவல்கள் வருகிறது.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 7 மாதமாக இந்த கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகிறது. அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தங்கி உள்ளனர்
தற்போது அங்கு இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் ஈகிள்டன் என்ற தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 77 எம்எல்ஏக்கள் ஹோட்டலில் இருக்கிறார்கள். 80 பேரில் 3 பேர் மட்டுமே ஹோட்டலுக்கு வரவில்லை.

பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்
இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும். அதில் பலர் தாக்குதலுக்கு உள்ளதாகவும் தகவல்கள் வருகிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.என் கணேஷ் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெ.என் கணேஷ் ஆனந்த் சிங்கை பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ்
காங்கிரஸ் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனந்த் சிங் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இதில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications