ஷாக்! பாஜக அமைச்சரை அடிக்க பாய்ந்த காங். எம்பி.. முதல்வர் முன்னிலையில் களேபரம்.. பரபரக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அரசு விழா ஒன்றில் பாஜக அமைச்சருக்கும் கர்நாடக எம்பிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஷாக்! பாஜக அமைச்சரை அடிக்க பாய்ந்த காங். எம்பி.. முதல்வர் முன்னிலையில் களேபரம்.. பரபரக்கும் வீடியோ

    பொதுவாக ஒரு மாநிலத்தில் எங்கு விழா நடந்தாலும் அங்குள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அழைப்பு விடுக்கப்பட மாட்டாது.

    சட்டசபைக்கு உள்ளே மட்டுமின்றி வெளியே பொது நிகழ்வுகளிலும் கூட இரு வேறு கட்சிகள் முறைத்துக் கொண்டிருப்பதை தற்போது மக்கள் விரும்பவில்லை.

    கர்நாடகா

    கர்நாடகா

    அதனால் சமீப காலங்களாக, மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட பல்வேறு மாநில அரசுகளும் அரசு தரப்பு விழாக்களுக்கு அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றன. அதன்படி கர்நாடக மாநிலத்தில் இன்று காலை ராமநகரா என்ற பகுதியில் அம்பேத்கர் மற்றும் பெங்களூரு நிறுவனர் கெம்பேகவுடாவின் சிலைகளைத் திறக்கும் அரசு விழா நடைபெற்றது. கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்ற பிறகு ராமநகரா பகுதிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

     மோதல்

    மோதல்

    ராமநகரா பகுதி காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் ஒன்று. இந்த பகுதியில் பாஜக தனது பலத்தை அதிகரிக்கத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தான் கர்நாடக மாநில பாஜக அமைச்சருக்கும் காங்கிரஸ் எம்பிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையே இந்த மோதல் நடந்துள்ளது.

     சர்ச்சை பேச்சு

    சர்ச்சை பேச்சு

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக மாநில அறிவியல் துறை அமைச்சர் சிஎன் அஸ்வத்நாராயணன், "நாராயண் தனது உரையின் போது, ​​காங்கிரஸ் தலைவர்கள் மீது முகமூடி தாக்குதல்களை நடத்தினார் மற்றும் பாஜக அரசாங்கத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டார். "சிலர் வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டு எதுவும் செய்வதில்லை. அதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. ராமநகர மக்களுக்கு வளர்ச்சியைக் கொண்டு வரவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் நாங்கள் இல்லை. கடந்த காலங்களில் இந்தப் பகுதிக்கு என்ன செய்தார்கள். அதை அவர்கள் சொல்லட்டும். அதை விட்டுவிட்டு அரசியல் செய்வதால் மட்டும் என்ன பயன். பாஜக அரசு செய்ததை என்னால் பட்டியலிட முடியும்" என்று பேசினார்.

     கடுப்பான காங். எம்பி

    கடுப்பான காங். எம்பி

    இது மட்டுமின்றி மேலும் கர்நாடக காங். தலைவர்களை அவர் மறைமுகமாகத் தாக்கி பேசியதாகக் கூறப்படுகிறது. இது அரசு தரப்பு விழாவில் பங்கேற்க வந்த காங். தலைவர்களுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் கடும் கோபமடைந்த காங்கிரஸ் எம்பி சுரேஷ் மேடையேறி சரசரவென அமைச்சர் அஸ்வத்நாராயணனை நோக்கிச் சென்றார். அவருடன் பெங்களூரு ரூரல் எம்.எல்.சி எஸ்.ரவியும் சேர்ந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

     மேடையில் களேபரம்

    மேடையில் களேபரம்

    அவர்கள் இருவரும் அமைச்சர் நாராயணனை பேசவிடாமல் மைக்கை பறிக்க முயன்றனர். மேலும், அவருடன் மேடையிலேயே வாக்குவாதம் செய்தனர். இது கைகலப்பிற்குப் போகும் நிலை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், உடனடியாக அங்கிருந்த மற்ற அதிகாரிகளும் போலீசாரும் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இவை அனைத்தும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையிலேயே நடந்தது.

     முதல்வர் முன்னிலையில்

    முதல்வர் முன்னிலையில்

    அரசு விழாவில் அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசியதாகக் கூறி கர்நாடக எம்பி சுரேஷ் மேடையிலேயே பசவராஜ் பொம்மை முன்னிலையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது மைக்கை வாங்கி பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "அம்பேத்கர் மற்றும் கெம்பேகவுடாவை கவுரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் நமது ஈகோக்கள் கொண்டு வரக்கூடாது" என்றார். முதல்வர் முன்னிலையிலேயே பாஜக அமைச்சருக்கும் கர்நாடக எம்பியும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+