கர்நாடக தேர்தல்.. காங்கிரஸ் 4ஆம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு
பெங்களூர்: கர்நாடக தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் 4ஆவது வேட்பாளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கே போட்டியும் அதிகரித்துள்ளது. அங்கே இப்போது பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

ஜேடிஎஸ் கட்சி போட்டியிட்டாலும் அவர்கள் ஓல்ட் மைசூர் பகுதியில் மட்டுமே செல்வாக்கு மிக்கவர்கள். அதைத் தாண்டி அவர்களால் பெரியளவில் வெல்ல முடியாது என்பதால் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டியே இருக்கிறது.
கர்நாடக தேர்தல்: பாஜக வழக்கமாகக் கையாளும் அதிரடி அரசியலை அவர்கள் கர்நாடகாவில் கையாளவில்லை. வேட்பாளர் அறிவிப்பில் கூட தாமதமாகவே இருந்தனர். அதேபோல பாஜக பெரும்பாலான தேர்தல்களுக்கு முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். ஆனால், இந்த முறை கர்நாடகாவில் முதல்வர் வேட்பாளரைக் கூட அவர்கள் அறிவிக்கவில்லை.
மறுபுறம் காங்கிரஸ் அங்கே உற்சாகமாக உள்ளது. அங்கே சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் களமிறங்குகிறது. இந்த முறை நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இறங்குகிறார்கள்.
மேலும், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும் இதனால் இந்த முறை தேர்தலில் எளிதாக வெற்றி பெறுவோம் என்றே காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: இதற்கிடையே கர்நாடக தேர்தல் காங்கிரஸ் கட்சியின் 4ஆவது வேட்பாளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏழு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளி-தர்வாட்-சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோல சி.டி.ரவியின் சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச் டி தம்மையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களைக் கைப்பற்றவே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் நிலவி வருகிறது.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications